கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
ஓ
163
இரண்டாவது தீர்மானம் : தமிழ்க் கலைகளின் தொடர்பாக இத்கைய கூட்டங்கள் சென்னையில் திரளான கூட்டத்துடன் முறையாகவும் அடிக்கடியும் நிகழ வேண்டியிருப்பதனால் தமிழ் உணர்ச்சியோடு கூடிய இடவசதி இக் கூட்டங்கட்கென்றே தனியாள் அமைந்திருக்க வேண்டும். ஆதலால் சென்னையில் 'சங்க நூல் மண்டபம்' என்னும் அழகிய பெயருடன் ஒரு நல்ல விரிவுரை மண்டபம் தோற்றுவித்தல் வேண்டும் என்பது.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கிளை அமைப்பு களுள் ஒன்றான தென்னிந்திய தமிழ்ச்சங்கச் சார்பிலே இம்மாநாடும், பிற மாநாடுகளும் கூட்டப்பெற்றன. சங்கச் செயலாண்மையர் வ.சு. அவர்கள் மாநாடுகளைத் திட்டமிட்டுக் கூட்டிச் சிறப்புற நடாத்தியதுடன் வரவேற்பும் நன்றியும் தக்காங்கு நிகழ்த்தும் பொறுப்பும் மேற்கொண்டார்.
எத்தனை மாநாடுகள் கழகம் நடாத்தியுள்ளது! எப்படி ஒரு மனிதர் திட்டப்படுத்தித் திருத்தமாகக் குறைவற நடத்துகிறார் என்பது வியப்பாக இருக்கும். திறனும் செயலாற்றலும் உடையோர் எவரோ அவரைத் தேர்ந்து தக்காங்கு பயன்படுத்தி அவர் திறனும் செயலாற்றலும் நாட்டுக்கு நலந் தருமாறு செய்வித்தலில் இணையற்ற பெருமகனார் வ.சு. அவர்கள். ஆகலின் அவர்க்கு ச் செயல்களெல்லாம் எளிதாக நிறைவேற்ற முடிந்ததாம்.
6
நெல்லையில் நிகழ்ந்த அனைத்து இலக்கிய விழாக்களிலும் செஞ்சொற் புலவர் திருக்குறள்மணி திரு. அ. க. நவநீத கிருட்டிணன் அவர்கள் எடுத்துக்கொண்ட சீரிய பங்கினை இன்று திரு.வ.சு. அவர்கள் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவர். அத்தகைய தொண்டர்களை ஆட்கொள்ளத் தேர்ந்தவர்ககு அருஞ் செயல் என்பதொன்றும் உண்டோ?