உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு 30

165

எல்லா விழாக்களையும் எடுத்தெழுதின் விரியுமென்றஞ்சிக் குறித்த சில விழாக்களை மட்டும் குறிப்பாம்.

ஊர்தொறும், பள்ளிதொறும் திருவள்ளுவர் கழகம் நிறுவப்பெறுதல் வேண்டும் என்றும், மொழிபெயர்க்கப் பெறாத உலக மொழிகளில் எல்லாம் என்றும், மொழிபெயர்க்கப் பெறாத உலக மொழிகளில் எல்லாம் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெறுதல் வேண்டும் என்றும், திருக்குறள், தமிழர் ஒவ்வொருவர் கையிலும் இருத்தல் வேண்டும் என்றும், திரு. வ. சு. கருதினார். இக் கருத்தைத் தம் உள்ளார்ந்த பேரன்பர் திரு. காழி சிவ. கண்ணுசாமிப்பிள்ளை அவர்களிடம் தெரிவித்தனர். இருவரும் கலந்துரையாடியதன் விளைவாகத் "திருவள்ளுவர் திருநாட் கழகம்" தோன்றியது. இத் திருநாட் கழகமே, நாடெல்லாம் திருவள்ளுவர் கழகங்கள் பெருக்கமாகத் தோன்றிப் பணி செய்தற்குத் தூண்டியது. வள்ளுவர் விழாக்கள் ஆங்காங்கு எடுக்கவும் ஏவியது.

கழக மாளிகை திருநாட் கழகப் பணிமனை ஆயிற்று. ஆட்சியாளர் திரு.வ.சு. அவர்கள் திருநாட் கழகப் பொறுப் பாளராகப் பணியேற்றினார்; விழாக் கடமைகளை மேற் கொண்டார்.

தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் தலைவராகவும், பாரிப்பக்கம் கண்ணப்ப முதலியார் செயலாளராகவும், காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை, டி. செங்கல்வராய பிள்ளை, மா. பாலசுப்பிரமணிய முதலியார் ஆகிய மூவரும் துணைச் செயலகளாகவும். டி. சிவராம சேதுப்பிள்ளை, திரு.வி. கலியாண சுந்தரனார், டாக்டர் என். கிருட்டிணசாமி ஐயங்கார், ச. சச்சிதானந்தம்பிள்ளை, ரெவரெண்ட் எச். ஏ. பாப்ளி ஆகிய வைரும் துணைத் தலைவர்களாகவும், புலவர் மயிலை சிவமுத்து, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், பரலி சு. நெல்லையப்பர், புலவர் மே. வீ. வேணு கோபாலப்பிள்ளை, புலவர சிவ. அருணகிரிநாதர், மணி கோடீசுவர முதலியார், டி. செங்கல்வராயன், பி.சி. மாணிக்கவாசக முதலியார், ஆர். எஸ். சாம்பசிவசர்மா, இ.த. இராசேசுவரி அம்மையார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றுத் திரு நாட்கழகப் பணி புரிந்தனர்.

1935 மே 18, 19 ஆம் நாள்களில் சென்னை, பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைத்திரு மறைமலையடிகளார்