உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

171

எவ்வளவு அரும்பெரும்நூல்கள் எல்லாம் வெளிவராமல் பேயிருக்கும் என்பதை நாமெல்லாம் எண்ணிப் பார்ப்போ மானால், இந்த நூற்பதிப்புக் கழகத்தினுடைய இன்றியமை யாமையை நாமனைவரும் அறிவோம்" என்று கூறி அதனை விளக்கியுரைத்துத் திரு.வ.சு. அவர்களின் செயல் திறனைப் பாராட்டினார். 'திருத்தொண்டர் மாக்கதை' நூலை வெளியிட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் பெரியபுராணப் புரட்சிகளையும் சிறப்புகளையும் விரித்துரைத்தார்.

திரு.வ.சு. அவர்கள் “என் அடிப்படையான ஆர்வ நோக்கம் பெரியபுராணத்திற்குக் கட்டாயம் ஓர் ஆராய்ச்சிக்கூடம் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவார்களேயானால் இப்போது என்னை வாழ்த்தினோர் வாழ்த்தெல்லாம் என் வாழ் நாளை நீட்டிக்கச் செய்யும் என்று உண்மையாகவே நம்புகிறேன்” என்று கூறி நன்றியுரைத்தார்.

அன்றுநிகழ்ந்த மாலை நிகழ்ச்சிக்கு அறநிலைய அமைச்சர் திரு. கே. வி. சுப்பையா தொடக்கவுரையாற்றினார். சட்டப் பேரவைத் தலைவர் திரு. கா. கோவிந்தன் தலைமையேற்று விரிவுரையாற்றினார். பேரறிஞர் பலர்சிறப்புரையாற்றினர்.

19-12-70 ஆம் நாள் சமயமாநாடு நடந்தது. அதில் இலங்கை திருமதி. இரத்தினநவரத்தினம் தொடக்கவுரையாற்றினார். தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தலைமையேற்றார். அறிஞர் பெருமக்கள் அறுவர் பேருரையாற்றினர்.

20-12-70 ஞாயிறு காலையில் தவத்திரு சுந்தரஅடிகள் தலைமையில்சமயமாநாடு தொடர்ந்து நடைபெற்றது. அன்று மாலை டாக்டர் மு.வ. தலைமையில்இலக்கிய மாநடு நிகழ்ந்தது. உயர்நீதிமன்ற நடுவர். திரு. பு. ரா. கோகுலகிருட்டிணன் பொன் விழா மலரை வெளியிட்டார். விழாவில் கழகப்புலவர் திரு. ப. இராமநாதபிள்ளையின் பணிநலம் பாராட்டிப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பெற்றது.

கழகச்சார்பில் திரு.வ.சு. தோற்றுவித்த அற நிறுவனங்களுள் ஒன்று திருநெல்வேலி, தென்னிந்திய தமிழ்ச் சங்கமாகும். அதன் சார்பிலேயே திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி நடைபெற்று வருகின்றது. இச் சங்கத்திற்கெனக் கட்டப்பெற்ற கட்டத் திறப்பு விழா 11-2-66 ஆம் நாள் திருநெல்வேலியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நிகழ்ந்தது.