உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

"திருநெல்வேலியில் சொந்தக் கட்டிடம் இல்லை என்ற குறை இப்பொழுது நீங்கியது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்' என்னும் பூரிப்புக்கலந்த வரவேற்புரையை வ.சு. அவர்கள் வழங்கினார்கள். 'தமிழ் வாழக் கழகம் தேவை' என்பதை வலியுறுத்திக் கூறினார் கட்டத்தைத் திறந்துவைத்த சட்டமன்றத் தலைவர் திரு. செல்லப் பாண்டியன்.

"வணிகத்திலும் பலவகையுண்டு. புத்தகம் வெளியிடுவது சிறந்த தொழில். 5 ரூபாய் கொடுத்து நான் திருக்குறள் வாங்குகிறேன் என்றால் நான் கொடுக்கும் தொகை குறைவு. பெற்றுக் கொள்ளும் அறிவு அதைவிடப் பன்மடங்காகும்' என்று வலியுறுத்தினார் சிவஞானமுனிவர் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றிய தவத்திரு குன்றக்குடியடிகளார்.

சாத்தான்குளம் திரு. அ. இராகவன் அவர்கள் கலை ஆர்வலர். அருங்கலைப்பொருள்களை அரிதின்முயன்று பெருக் கமாகத் தொகுத்து வைத்துள்ளவர். விழாவின் நிகழ்ச்சிகளுள் ஒன்றாகக் கழகச் சார்பில் அவர்க்கு 'நுண்கலைச்செல்வர்' என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் திரு. வ.சு. "புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்" என்பதுபோல், தொகுப்புக்கலைச் செல்வராகத் திகழும் திரு. வ. சு. அவர்களுக்கு இவ்வெண்ணம் தோன்றியதில் ஒன்றும் வியப்பு இல்லையன்றோ?

கட்டத் திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற நூற் காட்சியுடன் 'நுண்கலைச்செல்வர்' இராகவன் அவர்கள் தாகுத்து வைத்திருந்த அரும்பொருள்களும் இடம் பெற்றிருந்தன. க்காட்சி 12-2-66 முதல் 23-2-66 வரை பொதுமக்கள் காட்சிக்குத் றந்து வைக்கப்பெற்றிருந்தது. அறிவறிந்த நன் மக்கள் எண்ணா யிரவர்க்கு மேலும் இக் காட்சியைக் கண்டு களிப்புறும் வாய்ப்புக் கிடைத்தது.

"இந்த அபூர்வமான நூற்காட்சியைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியடைகிறேன். திரு. சுப்பையாபிள்ளை அவர்கள் தம் வாழ்க்கையையே தமிழுக்கு அர்ப்பணித்துத் தமிழ் உலகிற்குச் செய்திருக்கும் இந்தப் பெரும்பணியை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை" என்று காட்சியைக் கண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மோ. ம. இராசேந்திரன் பாராட்டுகிறார்.

.