கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
193
பணிகள் தொடர்பாக அவர்களைப்பற்றி எழுதும் ஒவ்வொரு பகுதியும் விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் என்று பண்டைச்சான்றோர் பகர்ந்தவாறே ஆம் என்பதும்
உண்மையாம்.
அரும்பொருள்கள்
தேடித்தொகுத்த கோடியாக இருந்தாலும் அவற்றை இனங்காணாவாறு குவித்து வைத்தோ, மூலையிலே கட்டி ஒதுக்கி வைத்தோ ஆவதால் பயன் என்ன? "எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை யானும் எனதென தென்றிருப்பன்” என்பது போலவே உடையவருக்கும், உடையவர் அல்லாத பிறர்க்கும் பயனின்றி வாளா ஒழியவே செய்யும்! ஆகலின் தொகுத்தலில் எவ்வளவு அக்கறை வேண்டுமோ, அவ்வளவு அக்கறை அவற்றைப் பேணிக்காத்தலிலும் வேண்டும். பேணிக்காத்தலில் எவ்வளவு அக்கறை வேண்டுமோ அவ்வளவு அக்கறை அவற்றைப் பிறர் கண்டுகளித்துக் கருந்தனம் ஈதென்று பயன்கொள்ளச் செய்தலிலும் வேண்டும். இம் மூன்றும் இணையாக்கால் தேடித் தொகுத்தலின் நலம் எட்டுணையும் இல்லையாம். முக்காலிக்கு எக்கால் முதன்மையானது என்பதற்கு வரும் விடையே இதற்கும் உரிய விடையுமாம்.
'ஆரா யினுமிந்தத் தென்காசி மேவுபொன் னாலயத்து
6
வாரா ததோர் குற்றம் வந்தாலப் போதைக்கு வந்ததனை நேரா கவேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே”
என்று கோயிலுக்கு யாதொரு குற்றமும் வாராமல் காப்பர் அடியைத் தன் முடியில் சூடிக்கொள்வதாகப் பாண்டியன் பராக்கிரமன் தன் தொண்டுள்ளம் துலங்கப் பாடுகின்றான். இத்தகைய பாண்டியன் வழியில் வந்த வரதுங்கராமபாண்டியன் மகப்பேறு இன்றி மடிந்தபோது அவன் தொகுத்து வைத்திருந்த அரிய ஏட்டுச் சுவடிகள் எல்லாம் கரிவலம் வந்த நல்லூர் திருக்கோயிலில் சேர்ப்பிக்கப் பெற்றன. அச் சுவடிகளை யெல்லாம் வேதற்தெளிந்தவர் விரித்தவாறு ஓமத்தீயில் எரித்து விட்டார்களாம். எப்படிப் போற்றினார்கள் கொடிய அப் பாவிகள்! ஆற்றிலே பதினெட்டாம் பெருக்கிலே விட்ட சுவடிகள், கறையானுக்கும் தீக்கும் இரையானவை எத்தனை எத்தனை?
6
டாக்டர் சாமிநாதையர் அவர்கள், ஏடு தேடி அரும்பாடு பட்டுத் தொகுத்த ஏந்தலாவர். அவற்றைப் போற்றிப் புரந்த புலமைச் செல்வரும் புகழாளரும் ஆவர். அவர் நெல்லைக்கு