194
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
ஒருமுறை சென்றார் சுவடிதேடி. வழிவழிப்புலவர் குடும்பத்தில் அப்பொழுது வக்கீல் ஒருவர் இருந்தார். பழம் புலவர் வீடாயிற்றே என்று ஐயர் அணுகிச்சென்று சுவடிபற்றிக் கேட்டார். என்ன அருமையான பதில் கூறினார் வக்கீல் ஐயா!
“எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்ாக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். ஆற்றிலே போட்டு விடலாம் என்றும், ஆடிப்பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டி ஆற்றில் விடுவது சம்பிரதாயம் என்றும் 'சில முதிய பெண்கள்’ சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்.'
வக்கீல் 'வேரறிவு மிக்க'இவ் வுரையைக் கூறும்போது உடன் இருந்தார் ஒரு புலவர். அவர் திருகூடராசப்பக் கவிராயர் என்பார். குறவஞ்சி பாடிய புலவர் வழியிலே வந்தவர். அவர் கூறினார்: "நான் (இங்கு) வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச்சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டுபோன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து (வக்கீலை அறைந்திருக்க வேண்டியது பாவம். சிறுவன்தானே, அடிபட்டால் அழுது கொண்டு ஓடக் கூடியவன்) அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின் மேல்வைத்தேன் என்று சொல்லி அத்தனை ஐயரவர் களிடம் எடுத்துத்தந்தார். அச்சுவடியே திருப்பூவணநாதர் உலாவை உலாவரச் செய்தது ஆகும்.
கலைச் செல்வத்தை அழிப்பாரைக் கன்னத்தில் அறையக் கூடியவர்கள் வழி வழியாக வந்திருந்தால் அவை ஓரளவு காப்பாற்றப்பெற்றிருக்கும். ஆனால் கறையான் அழிவு, தீப்பகை, படைக்கொள்ளை ஆய கொடுமைகளை என்ன செய்வது? போற்றிக் காத்தலைப் புனிதமான கடமையாக - தெய்வத் திருப்பணியாக - மேற்கொண்டவர்க்கே இயலும்! அவர்களா லேயே போற்றிக் காக்கப்பெறும். அவ் வகையில் போற்றத்தக்க பெருந்தகை - பொற்றகட்டில் வயிர எழுத்தால் எபதி முத்துக் கோவை எழிலுறுத்தி வைக்கததக்க பெருந்தகைப் புகழுக்குரியவர் திரு.வ.சு.