208
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
என்பது அவர்கள் துணிவு. 'வள்ளுவநாயனார்' என்பதே அவர்தம் வாய்மொழி. அவ்வாறாகவும் திருவள்ளுவர் திருநாள் கழகத்தலைமைப் பொழிவிலே, “உலகிலுள்ள வேறுபடு சமயத்த வரும் நாட்டவரும் இனத்தவரும் ஒன்றுபட்டு நன்னெறி நின்று இன்புற்று வாழப் பொதுமறை ஒன்று வேண்டும். அம் மறை திருக்குறளே. ஆகலின் அவரெல்லாரும் திருவள்ளுவரையும் அவர் குறளையும் உலகத்தலைமைப் பொதுக் குருவென்றும் பொதுமறை என்றும் ஏற்றுக்கொள்வராயின் யாம் அவ் வொற்றுமை நலங்கருதித் திருவள்ளுவரைப் பொதுமையாளர் எனவும் திருக்குறளைப் பொதுமமறை எனவும் கூறுவேம். திருவள்ளுவர் திருக்குறள் பற்றிய எம்முடைய தனிக்கருத்துக் களைக் கூறமாட்டேம்" என்றார்.
தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக்கழகங்களிலும் பட்ட மளிப்பு விழாவுக்கு வந்து பட்டம் பெறும் ஒவ்வொருவருக்கும் திருக்குறள் தெளிவுரை தெய்விகப் பேரவையின் சார்பில் வழங்கப்பெற்றது. பின்னே தேவாரம் திருவாசகம் போன்ற சைவ சமய நூல்களை வழங்குதல் வேண்டுமென நிறுத்திவிட்டனர். தேவார திருவாசகம் திரு.வ.சு. அவர்கள் விரும்பாதவையா? தலைமேல் கொள்ளத் தக்கவை என்பது வெளிப்படை. ஆயினும், "எந்நாட்டினர்ககும் எம்மொழியினர்க்கும் எச்சமயத்தினர்க்கும் எக்காலத்துக்கும் ஏற்றதாகிய திருக்குறளைத் தவிரப் பட்டமளிப்புப் ரிசுக்குகந்ததொரு வேறு எந்தத் தமிழ்நூலும் இல்லை என்பது வரும் ஒப்புக் கொள்ளக்கூடியது ஒன்றாகும்," என்கிறார் திரு.வ.சு. அவர் தம் திருக்குறள் காதல் அத்தகைய விழுமியது
என்க.
'வள்ளுவர் புகழை உலகம் அறியவேண்டும்' என்பது தம் வள்ளுவக்காதலே எனினும், வள்ளுவ அறத்தால் வையகம் உய்ய வேண்டும் என்பதே வ.சு. அவர்களின் உட்கிடை என்பது வெளிப்படை.
திருக்குறள் தொடர்பான கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், மலர்கள் ஆகியனவும் பல்வேறு பதிப்புகள், பல்வேறு மொழி களில் இதுகாறும் வெளிப்பட்டுள்ள மொழி பெயர்ப்புகள், திருவள்ளுவரைப்பற்றி வரையப் பெற்றுள்ள ஓவியங்கள், திருவள்ளுவர் பெயரால் இலங்கும் மன்றங்கள் ஆகியவற்றைப்