கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
30
209
பற்றியெல்லாம் எங்கும் என்றும் கண்டறியாவகையில், காட்சிப் பொருளாகவும் கருவூலமாகவும் தொகுத்துள்ள வ.சு.வின் நோக்கம் உலகுக் கென்றே தோன்றிய அவ் வுலகநூல் உலகோர் கூட்டுண்டு உய்யும் ஒரு பேரமுதமாக வேண்டும் என்பதேயாம். மேலை நாடாக இருப்பின் அவர் தொகுத்து வைத்துள்ள இவ்வருங்கலைக்காட்சிப் பொருளைக் கண்காட்சியாக வைத்தே பலகோடிப்பொருளை ஈட்டிக் கொள்ளமுடியும்! இவர்தம் காட்சியமைபேபா 'காசிலா'க்காட்சி யமைப்பு, காண்பார் கொண்டுசெல்லும் கருத்துப்பயனே கட்டணம் இறை, பரிசு,
எல்லாம்!
திருக்குறள் காட்சியை உலகம் திளைக்க வைக்க வேண்டும் என்னும் 'தீராக்காதலர்' திரு.வ.சு. ஆதலால் அதனை அதற்கேற்ற சூழலில் - அமைப்பில் வைப்பதே அருமை என உணர்ந்து உணர்ந்தவாறே கடனாற்றி வருகிறார். வள்ளுவப் பெருந்தகை வளர்புகழுக்கேற்ப வனப்புற அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஐந்து முறை திருக்குறள் கண்காட்சி வைக்கப் பெற்றுள்ளது.நீலத்திரைக்கடல் ஓரத்திலே நிற்கும் வள்ளுவர் நினைவுத் திருக்கோயில் பாறையில் திருக்கோயில் கால்கோள் விழாவின்போது ஒருமுறை காட்சியமைக்கப் பெற்றது. நடமாடும் வள்ளுவர் நினைவாலயம் இவ்வருங்காட்சி என்பதைக் கண்டோர் அனைவரும் விண்டு மகிழ்ந்தனர்! வ.சு. அவர்களின் வள்ளுவக் காதல் நூற்பதிப்பாகும்; காட்சியாகும்; கலைக் கோயிலாகும்; கவின் தமிழ் மாளிகையுமாகும்!