கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
ஓ
223
அவ்வளவில் நில்லாமல் 1953 - 55 வரையுள்ள இரண்டு ஆண்டுகளுக்குரிய கணக்கைத் தணிக்கை செய்து முடித்திருந்தும், மீண்டும் வரிவிதிப்பாணைக்கு உட்படுத்துதற்காக அக் கணக்கை அனுப்புமாறும் ஆணை பிறப்பிக்ப்பட்டது. இந்நிலையில் தோற்று வித்த அறநிலையத் தொண்டுகளைத் தொடர முடியாத இக்கட்டுச் சூழ்ந்துவிட்ட நிலைமை தோன்றியது. அதற்காகவும், திரு.வ.சு. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நேர்ந்தது. அப்பொழுது, கழக வழக்கறிஞர் திரு. இராசகோபால் முதலியார் அவர்களுடன் வருமான மேல்முறையீட்டு வழக்கில் பெயர் பெற்ற திரு.எம். சுப்பராயர் அவர்களும் உதவிக்கு வந்தனர். வழக்கு இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது ஒருதிருப்பம் நேர்ந்தது.
திரு.வ.சு. அவர்கள் திருநெல்வேலிக்குச் சென்றார். அங்கே இரா. ந. குற்றாலிங்கம் பிள்ளை என்பார் அடிகளாரொடு ஆவிஉலகத் தொடர்பு கொண்டார். அவர் அக் கலையில் முன்னரே வல்லவராகத் திகழ்ந்தார். கழக அறப்பணிகளுக்கு உண்டாகிய இக்கட்டுகளை ஆவியுலகத் தொடர்பாளர் அடிகளார்க்கு அறிவிக்க அவர் அஞ்சவேண்டா! திருவரு துணையிருக்கிறது; தமிழக அரசின் நிதியமைச்சர் திரு. சுப்பிரமணியம் அவர்களிடம் வழக்கு நிலைகளை எடுத்துரைக்கவு அவர்கள் முன்வந்து வரிவிலக்குப் பெறுதற்குரிய வழிவகை களைச் செய்து கொடுப்பார்கள் என்று உரைத்தருளினார். அதன் படி அமைச்சர் அவர்களைத் திரு.வ.சு. அவர்கள் கண்டார்.
அமைச்சர் நிகழ்ந்ததை அறிந்துகொண்டு உதவ முன் வந்தார். விண்ணப்பமும், முறையீட்டு மன்ற நடவடிக்கைகளும், அவற்றின் தீர்ப்புகளும் அமைச்சர் சி.சு. அவர்களுக்கு ஒரு படியும் நடுவணரசு வருவாய்த்துறை அமைச்சர் திரு. பி. கோபாலரெட்டி அவர்களுக்கு ஒரு படியுமாக இரு படிகள் தரப்பெற்றன. பின்னர் அப்போது நடுவணரசு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வரும் கழகப்பணிகளை நன்கறிந்திருந்தவருமாகிய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களைக் கண்டும் நிலைமையைக் கூறினர். அவரும் உதவ முன் வந்தார்.
நேரேசென்று திரு. கோபாலரெட்டி அவர்களைக் காணுமாறு திரு. வ. சு. அவர்களிடம் அமைச்சர் திரு.சி.சு. அவர்கள் கூறினர். அதன்படி தில்லிமாநகர்க்குச் சென்றார்