226
இளங்குமரனார் தமிழ்வளம் - 27 3
தையற்பள்ளி தையற்கலையைக் கற்பிப்பதுடன் மகளிர் வாழ்க்கைநெறி, குடும்பம்பேணல், சமய ஈடுபாடு ஆகியவற்றைக் பெற்றுச் சிறக்கவும் வழிசெய்து தொண்டாற்றுகின்றது. அதனைப் பல்வகைத் தொழிற்பயிற்று நிலையமாக்க ஆர்வம் கொண்டு ள்ளார் திரு. வ.சு. ஆடற்கலை, இசைக்கலை, ஓவியக்கலை, குழந்தை பேணற்கலை, முதலுதவிக்கலை, தட்டச்சுக்கலை, சுருக்கெழுத்துப் பயிற்சிக்கலை இன்னபிறவெல்லாம் நீலாம்பிகையார் பல்துறைப் பயிற்சிப் பள்ளியிலே பயிற்றப்ப பெற வேண்டும் என்பது அவர்தம் உட்கிடை.
கா.சு. பிள்ளை மன்றத்தின் இயக்குநராகத் திகழ்ந்தவர் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிப்புலமையும் ஒருங்கமைந்த திரு.இர.பாலகிருட்டிணமுதலியார் ஆவர். இம் மன்றத்தின் வழியாகப் பதிற்றுப்பத்து, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகியவையும் திருக்குறள், நாலடியார் தவிர்த்த 'தினெண்கீழ்க் கணக்கு நூல்களும் ஆங்கில ஆக்கம் பெற்றன.
மக்களுக்கு அளப்பரும் வளப்பங்களை இயற்கை அருளியுள்ளது. எண்ணருங் கருத்துகளையும் ஏற்றமிக்க கலைச் செல்வங்களையும் உலகத்து அறிஞர்கள் வழங்கியுள்ளனர். இவ்வனைத்தும் பெற்று நலஞ்சிறந்தோங்கும் ஒருவர் நானிலத் துக்குச் செய்யும் கடன் என்ன? பட்ட கடனைத் தீர்க்காத கடனாளியாக வாழ்ந்து போவதா? வழிவழி வருவார்க்கு வைப்பகம் தொகுத்து வைத்து என்றும் பெயர் சிறக்க -வழி வழி வாழ்த்த - என்றும் வாழும் இசை வாழ்வில் நிலைப்பதா? இப் பெருஞ்செயல் செய்வார் பெற்றிமை பேசுதற்கு அரிதே.
D