ஓ கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
30
225
ஏனெனில், வழிவழியாகத் தழைக்கவேண்டிய அறச்செயல் தடையின்றி நடக்க வாய்த்தது அல்லவோ, அதனால்!
'கவனக்குறைவால் அடுத்தடுத்துத் தன் செல்வங்களை யெல்லாம் இழந்துவரும் தமிழ்ச் சமுதாயத்தில் கலைச் செல்வங்கள் பலவற்றையும் தேடிச்சேர்த்துப் பாதுகாத்துக் காட்சியாக வைத்து நமக்கெல்லாம் ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டும் திரு. சுப்பையா பிள்ளை அவர்களுக்குத் தமிழர் பெரிதும் கடமைப்பட்டுள்ளார் என்று சிவஞான முனிவர் நூல்நிலையத்தைக் கண்ட சென்னைப் பல்கலைக்கழகுத் துணை வேந்தர் திரு. நெ.து. சுந்தர வடிவலுே பாராட்டுகிறார்.'
"ஒரு வாசக சாலையைத் திறக்கிறவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான் என்பது நல்லறிஞர்களின் வாக்கு. இந்தச் சிவஞான முனிவர் நூல்நிலையத்தைத் திறந்துவைத்த திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தினர் இதனை மெய்ப்பித்துக் காட்டியிருக் கின்றனர்” என்கிறார் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள்.
பல்கலைக்கழகங்கள், மதுரைத் தமிழ்ச்சங்கம் ஆகியவை நடாத்தும் புலவர் தேர்வுக்குப் புலமையிற் சிறந்த பேராசிரியர் களைக் கொண்டு வகுப்பு நடாத்துகின்றது திருவள்ளுவர் புலவர் கல்லூரி அதன் பெருமைக்கு நிலைக்களமாக இருந்த பெரு மக்களுள் திரு. புன்னைவனநாத முதலியார் குறிப்பிடத்தக்கவர்.
புலவர்களுக்குப் பாடம் கற்பித்த அளவில்நில்லாமல் அனைத்துப் புலவர் கல்லூரிமாணவர்க்கும் பொதுத்தேர்வும் நடாத்துகின்றது புலவர் கல்லூரி. அவர்களை ஊக்கப்படுத்து முகத்தான் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றது.
குமரகுருபரர் குழந்தை வளர்ப்புப் பள்ளி 1967 ஆம் ஆண்டில் நேரு பெருமகனார் பிறந்த நாளாகிய நவம்பர்14 இல் தொடக்ககப் பெற்றது. குழந்தைகளுக்கெனத் தனி நூல் நிலையமும் ஆங்குளது. விளையாட்டுப் பொம்மைகள், கருவிகள் ஆகியவை குழந்தைகள் விருப்புக்கு ஏற்றவண்ணம்உள்ளன. தேர்ச்சிமிக்க ஆசிரியைகளும் தாய்மைத் தன்மையோடு பேணும் ஆயாக்களும் தேவாரம் ஓதுவித்தற்கென ஆசிரியர் ஒருவரும்
உளர்.