உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

வெடுக்க விழைந்து வந்த பெருமக்களையும் வருக வருக என வரவேற்பது போல வண்ணத் திருமாளிகையின் வளமார்ந்த வாயில் எழிலுடன் இலங்கியது. தாமரைச் செல்வர் பவள விழா என்பது பவளவண்ண எழுத்துக்களால் பொறிக்கப் பெற்றிருந்தது. வாழையும் கமுகும் வகைபெறு தழைகளும் வண்ணத் தாள்களும் வாயில் தொட்டு அரங்கம் வரையும் வனப்புற விளங்கின. வேலைப்படமைந்த தென்னை யோலைத் தொங்கல்கள் பக்க மெல்லாம் அழகு செய்தன. பவளவிழாச் செல்வரின் பெயரன் பெயர்த்தியர் பனிநீர் தெளிந்தனர். முந்துற வந்து சந்தனம் தந்தனர்; கற்கண்டும் உரோசா மலரும் கனிவுடன் வழங்கிக் களித்தனர்.

அரங்கில் அமர்ந்த அவையோர் உள்ளமும் நோக்கும் தென்பால் இருந்த விருந்தறைமேல் படர்ந்தன. அறுசுவை விருந்துகளே கண்ட அவ் விருந்துக கூடம், அமிழ்தினும் இனிய அருந்தமிழ் விருந்து மாளிகையாய் இலங்கியது. அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்த கருவூலமாகிய காட்சிக் கூடம், அருந்து அமிழ்து என ஏவிக்கொண்டிருந்தது.

காட்சியரங்கில் தம்மை மறந்து நின்றவர் பலர்; தனியே ஓர் இடத்துநின்று தணியா ஆர்வத்தால் நோக்கியவர் பலர்; கால் கடுக்க நின்றும், மண்டியிட்டு நின்றும், கால்மடக்கி அமர்ந்தும் குறிப்புகள் எடுத்துக்கொண்டவர் பலர்; அவருள்ளும் நம்பியரினும் நங்கையர் மிகப் பலர்!

சரியாக மாலை 6-30 மணிக்கு விழாத் தொடங்கியது. இசைப் பேரரசி சேலம் செசயலக்குமி தமிழ் வாழ்த்துப பாடினார். தமிழக ஆளுநர் மேதகு கே. கே. ஷா நடுநாயகராய் அமர, செட்டி நாட்டரசர் இராசா சர். முத்தையா செட்டியார் அவர்களும், அமைச்சர்களும், நடுவரவர்களும், பவள விழாச் செல்வர் அவர்களும் இருபாலும் அமர்ந்தனர்.

பவளவிழாக் குழுவின் தலைவர் நலத்துறை அமைச்சர் திரு.க. அன்பழகன் வரவேற்புரை வழங்கினார். எளிதில் காண்டற்கு அரிய எழில் விழா ஈதென்று பவளவிழாச் செல்வரின் பணிநலமும் அணிநலமும் பாராட்டி ஆளுநர் விழாவைத் தொடங்கி வைத்தார். செட்டி நாட்டரசரும், முதல்வர் கலைஞர்மு. கருணாநிதி அவர்களும், கல்வியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும், உயர்மன்ற நடுவர் திரு. எஸ். மகராசன், கல்வித்துறை இயக்குநர் எஸ்.வி. சிட்டிபாபு ஆகியோர் பவளவிழாச் செல்வரைப் பாராட்டினர். பவளவிழா மலரை வெளியிட்டு