உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

257

நயமிகுத் தேத்தினார் நாவலர், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதற்பரிசு பெற்ற புலவர் ஆ. பழனி அவர்களின் ‘அனிச்ச அடி' என்னும் நூலை வெளியிட்டு, நூலாசிரியர்க்குக் கழகச் சார்பில் பொற்கிழியும் பொன்னாடையும் வழங்கினார் கலைஞர் அவர்கள். திரு.வ.சு. அவர்கள் நயத்தக நன்றி யுரைத்தார்.

5-8-73 காலை 9-30 மணிக்கு உயர்மன்ற நடுவர் திரு. பு. ரா. கோகுல கிருட்டிணன் அவர்கள் தலைமையில் விழாவின் இரண்டாம் பகுதி தொடங்கியது. டாக்டர்மெ.சுந்தரம் அவர்கள் வரவேற்புரைத்தனர். மேனாள் முதல்வர் திரு. மீ. பக்தவத்சலம், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்திரு. நெ.து. சுந்தர வடிவேலு, டாக்டர் திரு.சி. பாலசுப்பிரமணியம், திரு.மா. சண்முக சுப்பிரமணியம், மொழிப் பேரறிஞர் திரு பாவாணர், நூலக இயக்குநர்திரு.வே. தில்லை நாயகம், டாக்டர் திரு. ஒளவை து. நடராசன், குழந்தைக் கவிஞர்திரு. அழ. வள்ளியப்பா ஆகியோர் வாழ்த்துரைத்தனர். பவளவிழா நினைவாக வந்திருந்தோர் அனைவருக்கும் ஊற்றெழுது கோலுடன் (ballpoint pen) கையேடும் அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

நண்பகல் இடைவேளைக்குப் பின், 4 மணிக்கு மீண்டும் விழாத் தொடர்ந்தது. சேலம் செயலக்குமியார் இன்னிசை மணிவரை நிகழ்ந்தது. டாக்டர் பா. நடராசன் அவர்கள் சென்றார். டாக்டர்ந. சஞ்சீவி அவர்கள் பதிப்பு கட்டளைத் தகவுற விளக்கி வந்திருந்தோரை வர டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தாமரைத் திரு டாக்டர் வ. செ. குழந்தைசாமி, திருவாட்டி சௌந்தரா கைலாசம், டாக்டர்க.ப. அறவாணன், தவத்திரு சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பாராட்டினர்.

கழக நூலாசிரியர் முதுபெரும் புலவர் இராவ்சாகேப் கு கோதண்டபாணிப்பிள்ளை, புலவர்இரா. இளங்குமரன் ஆகிய இருவர்க்கும் கழகச் சார்பில் ம. பொ. சி. அவர்கள் பொன்னாடை போர்த்திப் பரிசு வழங்கினர். விழாவில் பங்குகொண்ட அனைவருக்கும் சந்தனமாலை சூட்டப்பெற்றது. அதனைக் கொண்டு செல்லுதற்கு வாய்ப்பாகப் பவள வண்ணப்பை வழங்கப் பெற்றது. விழாச் செல்வர் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் கூட்டம் இனிது நிறைந்தது.

வ.சு. அவர்களின் முத்துவிழா 7-10-77 இல் சென்னைப் பவழக்காரத் தெரு, வணிக வைசிய திருமண மண்டபத்தில் சீரும்