264
இளங்குமரனார் தமிழ்வளம் - 27 278
ஊதியம் கருதா உழைப்பு
கழகம் தொடங்கிய நாள் முதல் 1944 ஆம் ஆண்டுவரை சென்னை முகவராகப் பணிசெய்தவர் தாமரைத் திருவினர். இவர் தொடக்கச் சம்பளம் ரூ.35. 1927ஆம் ஆண்டுடி முதல் படிப்படியே உயர்ந்து 1944 வரை ரூ. 85 மட்டுமே பெற்றுவந்தார். இந்த மாதச் சம்பளம் அன்றிவேறு எவ்வூதியமும் எதிர்பாராமல் கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். ஓர் அமைப்பினை வளர்க்கக் கருதுவார்க்கு வளமான எடுத்துக்காட்டாகும் இவர்கள் செயல்! 'அமைப்பை வளர்த்துவிட்டால் அதுவே தம்மை வளர்த்தல் ஒருதலை; மாறாகத் தம்மை வளர்க்த் தொடங்கிவிட்டால் அமைப்பு அமைப்பாகவே இராது' என்பது இவர்கள் உறுதிப்பாடு. இவ்வுறுதிப்பாட்டில் அன்றும் தவறியதில்லை; இன்றும் தவறியது இல்லை.
பொது அமைப்புகளும் கூட்டுப்பங்கு நிறுவனங்களும் நம் கண்காண எத்தனை எத்தனை சுரண்டல் களமாகக் - கொள்ளை நிலையமாகக் காட்சி வழங்குகின்றன! அவை வெற்றி பெற்ற அமைப்பாகத் திகழ்கின்றனவா? விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் கூட நம்மால் அத்தகைய அமைப்புகளைக் காண முடியுமா? ஏன் முடியவில்லை? தம்மை வளர்த்தல், தம்மையே வளர்த்தல்என்னும் நோக்கத்தில் ஊறித்திளைப்பவரிடம் ப்படைக்கப்பட்ட நிறுவனத்தின் நிலைஅப்படித் தானே இருக்க
டியும்!
விடுமுறை விரும்பாமை
தொண்டிலே முனைந்தவர்க்கு விடுமுறையும் ஓய்வும் தொல்லையே போலும்! இரவும் பகலும் ஆய்வுக் கூடமே தஞ்சமாக இருந்த எடிசன்மேல் பேரன்புகொண்ட நண்பர் ஒருவர் ஆய்வுக்கூடத் தாழ்க்கோலை எடுத்துக்கொண்டு வெளியூர்க்குப் போய்விட்டார். சில நாள்கள் சென்று, நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நண்பர் என்னும் மகிழ்ச்சியில் திரும்பிய அவர் துடிதுடித்து போனார். எடிசனைக் கட்டிலோடு கட்டிலாகக் கண்டார். காய்ச்சல் வாட்டிக் கொண்டிருந்தது. புலம்பிக் கொண்டிருந்தார் எடிசன்!
ப
நண்பர் வருந்தி மன்னிப்புக் கேட்டார். தாழ்க்கோலை எடுத்துக்கொண்டு ஆய்வுக்கூடம் சென்று கதவைத் திறந்தார் எடிசன். காய்ச்சல் பறந்தது. நண்பர் வியந்துபோனார். எடிசனுக்கு நலம் எது? நோய் எது? உழைப்பே உடல்நலம்! ஓய்வே நோய்!