கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
265
என்பதை உணர்ந்துகொண்டார். இவ் வெடிசனார் மறுபதிப்பே திரு.வ.சு.
அரசு அலுவலகமா, பள்ளிகளா, எத்தனை விடுமுறை நாள்கள்? இவர் பிறந்தநாள் - அவர்மறைந்தநாள் - இவற்றுக் கெல்லாம் விடுமுறை. எவர் நினைவு நாளோ அன்று அவரைப் பற்றித் தெரிய வேண்டாவா - அவர் புரிந்த தொண்டைச் செய்ய வேண்டாவா - அவர்நினைவே இல்லாமல் விளையாட்டு வேடிக்கைகளில் பொழுது போக்கி வெட்டித்தனமாக்கும் விடுமுறைகளால் என்ன பயன்? என்று அடுக்கடுக்காக வினாக் களைத் தொடுப்பார் செயல் வீரர் திரு.வ.சு.
"ஓய்வு என்பது ஒருவேலையை மாற்றி மற்றொரு வேலை பார்ப்பதே." வேலையே இல்லாமல் இருப்பது ஓய்வு ஆகாது. உழைத்து அலுத்துப்போன உடலுக்கு ஓய்வு கட்டாயம் வேண்டும். உடற்பொறியின் தேய்மானத்தை ஈடுபடுத்தக் கட்டாயம் ஓய்வு வேண்டும். ஆனால், வேலையே இல்லாமல் விடுமுறையில் பொழுதைக் கழிப்பது உடலைப் பாழ்படுத்தும் என்று அறிவுரை கூறுவார்ஆட்சியார். ஆதலால் அவர் பாராட்டுகு உரிமையாக விளங்வேண்டியவர் 'விடுமுறைத் தூங்கு மூஞ்சிய'ராக இருத்தற்கு இயலாது. எள் என்னுமுன் எண்ணெயாக இருப்பவராக இருத்தள் வேண்டும்.
நினைத்தவை நிறைவேற்றல்
நல்லனவே எண்ணல், எண்ணிவற்றைத் திண்ணியதா. நிறைவேற்றல் என்பது திரு.வ.சு. வின் கடைப்பிடிகளுள் ஒன்று; தலையாய ஒன்று. எங்கும் காணற்கரிய அருங்கலைச் செல்வங்கள் பல கழகக் காட்சியமைப்பில் உண்டு என்றால் ஆட்சியாளரின் இக் கடைப்பிடியால் பெற்ற நலமேயாம். அவற்றைப் 'படந் தொகுத்தலில்பட்டறிவு' என்பதில் கண்டுள்ளோம். இங்கே
ஒன்று :
வ.சு.பாளையங்கோட்டையில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு நாள் தம் உறவினர் வழக்கறிஞர்திரு. சி.பி. சுப்பையா பிள்ளையினிடம் கைக்குள் அடங்கும்படியான செகப்பிரியர் இயற்றிய ஒதெல்லோ நாடக நூலைக் கண்டார். அப்பொழுதில் நம் தெய்வத் திருக்குறள் இதே அளவில் அச்சிடப் பெறின் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினார். அப்பொழுது கழகம் தோன்றப்போகிறது என்பதும் தெரியாது. கழகத்தில் பணிபுரியப் போகிறோம் என்பதும் தெரியாது. ஆனால்