266
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
திருக்குறளைப் பற்றி எண்ணிய எண்ணம் கைகூட நாட்டவர் புகழ நிறைவேறிற்று அன்றோ! அம்மட்டோ? திருக்குறள் ‘குறும்’ பதிப்புக்கு முன்னோடியான அந்நூல் காட்சியில்இடம்பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தார்வ.சு. 1959 இல்அது நிறைவேறியது.
1959 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரிய நூற் காட்சி ஒன்று நடந்தது. பல்வேறு அமைப்புகள் பங்குகொண்ட அக்காட்சியில் பச்சையப்பன் கல்லூரி அமைத்திருந்த காட்சிப் பகுதியில்தம்மைக் கவர்ந்த ஒதெல்லோ நாடகநூல் அளவிலான பன்னிரு நூல்கள் இருக்கக் கண்டார்.
அவற்றைக் கண்டு மகிழ்ந்த வ.சு. பச்சையப்பன் கல்லூரி நூலகர் திரு. செங்கல்வராயன் வழியே அந் நூல்கள் பித்தரபுரம் அரசருடையவையென்றும் அவர் பேரர் ஆங்குப் பயில்கின்றார் என்றும் அவர் கொணர்ந்து தந்தவையே அவை என்றும் அறிந்தார். அவரிடம்தம் வேட்கையை உரைத்து அந் நூல்களுள் ஒன்றாகிய "அதென்சு நகரத்துத் தைமதன்" (timon of Athens) என்னும் நாடக நூலைப் பெற்றுக்கொண்டார். அதற்குப் பின்னே கழகும் வைக்கும் காட்சிகளில் எல்லாம் அந்நூலை வைத்து, இந்த நூல்மான் மிகச் சிறிய அளவிலுள்ள கழகத் திருக்குறள் பதிப்பைக் கொண்டுவருவதற்கு வழி காட்டியது என்று அச்சிடப்பெற்ற குறிப்பு வைக்கப் பெறலாயிற்று. நினைவது நல்கவேண்டும்; அது நிறைவேற வேண்டும் என்றால் நினைத்ததன் வண்ணமாகவே அவர் இருத்தல் வேண்டும் அன்றோ? அது வ.சு. அவர்களுக்கு இயற்கை ஆயிற்று. நாடியபொருள் கைகூடும்
நாடியபொருள் கைகூடும் என்பது திரு.வ.சு. அவர்கள் நாடோறும் கூறும் நயவுரையாகும். அவர்கள் நாடிய பொரு ளெல்லாம் நாளும் கூடக் கண்டுணர்ந்தஉணர்வே இதனை வாயாரக் கூற வைக்கின்றது. பெருமைமிகு எலிசபெத்துப் பேரரசியார்இந்தியாவுக்கு வந்தார். அவருக்குப் போப்பையர் மொழிபெயர்த்த திருக்குறள் பதிப்பை எழில்மிகு கட்டஞ் செய்து வழங்க உன்னினார். அதனை வைத்து வழங்கற்கு ஏற்ற வனப்புறு பெட்டகம் வேண்டுமென எண்ணிச் சென்னை மலைச்சாலையிலுள்ள விக்கேடாரியா கலைப்பொருள் அங்காடி சென்றார். ஆங்கே இந்நூலைவைத்து வழங்கற்கு என்றே திட்டமிட்டுத் தேர்ந்த கலை வல்லார் ஒருவர் கட்டளைபெற்றுச்