எழுத்து
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
6
281
எந்த எழுதுகோலைக் கொண்டு எழுதினாலும், எந்த நிலையில் இருந்து எழுதினாலும், எந்த அகவையில் எழுதியது என்றாலும் மாறாமல் ஒன்றுபோலவே அமைந்து தமக்கென்றே அழுந்திப் போய்விட்ட கையெழுத்து! எத்தனை நூறாயிரங் கடிதங்கள் எழுததியதோ அந்தக் கை! கடிதத் தொகுப்புக் கட்டுக் கட்டாகத் தொகுத்து வைத்துள்ள அந்தஏந்தல் எழுதிய கடிதங்கள் கழகத் தொடர்புடைய புலவர்கள் பெருமக்கள் இல்லங்களி லெல்லாம் கட்டுக் கட்டாக இருக்கும். கழக ஆட்சியாளரைப் போல் கடிதத்தால் கடமையை நிறைவேற்றிக் கொள்ள வல்லவர்கள் அரியர்! நாளைக்கு முப்பது நாற்பது கடிதங்கள் எழுதுவார் போலும்.
ஒழுங்கு
திரு.வ.சு. ஒழுங்கர்; ஒழுக்கத்தை மதிப்பவர்; ஒழுக்க மின்மையைக் கண்டிப்பவர். ஏன்? அவர் ஓர் ஒழுங்கர்.
எந்தப் பொருள் எங்கே எந்த நிலையில் இருக்க வேண்டுமோ, அந்தப் பொருள் அங்கே அந்த நிலையில் இருப்பதே ஒழுங்கு யார் எதை எப்படிச் செய்தல் வேண்டுமோ, அதை அவர் அப்படிச் செய்தல்ஒழுங்கு! வீட்டை அலுவலகமாகக் கருதுதல் ஒழுங்கன்று! அவ்வாறே அலவலகத்தை வீடாகக் கருதுதலும் ஒழுங்கன்று. இரண்டு இடங்களும் இரண்டன் பணி நடைமுறை களும் வேறுபட்டவை. குடும்ப உரிமையன்பு கொஞ்சிக் குலவுதல் பணிக்கு நல்லதே! ஆனால், அது குடும்பமே ஆகிவிடக்கூடாதே! ஆதலால் குடும்பத்திலேயே அலுவலகப் பணி செய்தால் அவர் அலுவலராகவே இருத்தல் வேண்டும். இப்படி எத்துணைப்பேர் கருதுவர்? திரு.வ.சு. கருதுவார்.
அவருக்குத் தலைவர் - ஆட்சித் தலைவர்- இலர். அவரே ஆட்சித் தலைவர்! ஆனால் மனச்சாட்சி அவர்க்குத் தலைவர். ஆதலால் அதற்கு மதிப்புந் தந்து எடுத்த பணிக்கு இணை யில்லாப் பெருமை சேர்க்கின்றார். இவ்வாறு அன்றி அவரால் வேறு வகையில் இருக்க இயலாது! ஏனெனில், அவர்தம் உணர்வொடும் உயிரொடும் ஒன்றிப்போன நடைமுறை இது.