உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

301

தவர்கள். நாம் அளிக்கும் ஊக்கம் எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. நாம் அளிக்கும் ஊக்கம் எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. நாம் பாராட்ட வேண்டும் என்றோ நீரிலே மீன் நீந்துன்கிறது? பறவைகள் பறக்கின்றன? நீந்துவது மீனின் இயல்பு. பறப்பது பறவைகளின் இயல்பு. அதுபோல் தமிழ்ப்பற்றும், தமிழ்த் தொண்டுள்ளமும் திரு.வ.சு. பிள்ளையவர்களுக்கு இயல்பாய் அமைந்த நீர்மைகள்.

திரு. மா. சண்முக சுப்பிரமணியம்.

தமிழாட்சிக் கால்கோள்

ஆட்சிச்சொல்அகரவரிசையைக் கழகம் வெளியிட்டதே, தமிழகத்தில் தமிழாட்சி நடைபெறுவதற்குக் கால்கோள் செய்ததாக அமைந்தது.

கல்லைக் கனியாக்க வல்லவர்

கல்லையும் கனியாக்க வல்லவர்கள் ஆதலின், எளிதி இயங்கா இயல்புடைய என்னையும் இப் பணியில் ஈடுகொள் வைத்தது எனக்கே வியப்பளிக்கும் செய்தியாக என்றும் இருந்து வரும் பாங்கினதாகும்.

கழகம் தோன்றாதிருந்தால்

திரு. பிள்ளையவர்களைக் காணும்போதெல்லாம், நினைக்கும் போதெல்லாம் அவர்களது அசைக்கலாகாத அன்னைமொழிப் பற்றும் தணிக்கலாகாத தனித்தமிழ் ஆர்வமும் என் நெஞ்சத்தை ஈர்த்து இன்புறுத்தும். தமிழ்த்தாய் செய்த தவப்பயனாய் அவர்கள் தமையனார் திரு.வ. திருவரங்கம் பிள்ளையவர்களும் திரு. பிள்ளையவர்களும், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தோற்றுவித்திராமல் இருந்தால் இத்தனை இலக்கிய இலக்கண அறிவுசால் நூல்களை இவ்வளவு திருத்தமான முறையில் இத்துணை அழகழகான வடிவங்களில் தமிழுலகம் எங்ஙனம் பெற்றுப் பயனடைய இயன்றிருக்கும் என எண்ணி எண்ணி இறும்பூது எய்துகின்றேன்.

திரு.கீ. இராமலிங்கனார்.