302
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
நூல் காக்கும் நோன்மை
தமிழ்மொழியில் தோன்றிய எந்த நல்ல நூலும் அழிந்து போமாறு விடக்கூடாது என்பது பிள்ளையவர்களுடைய உறுதியான கொள்கை. இறந்து போகத்தக்க நிலையில் இருந்தனவும், பிற பதிப்பாளர்கள் யாரும் வெளியிடக் கனவிலும் எண்ணாதனவுமாக இருந்த பல நூல்களைப் பிள்ளை அவர்கள் உலகில்நிலைபெறுமாறு செய்திருக்கின்றார்கள்.
கருப்பக்கிளர் சு. அ. இராமசாமிப் புலவர். கழகக் காதல்
கழகம் என்றால் சுப்பையா பிள்ளை என்று பொருள்; சுப்பையா பிள்ளை என்றால் கழகம் என்று பொருளாகும். தெளிவாகக் கூறுவதானால் கழகத்தின்மீது திரு. பிள்ளையவர்கள் தம் பெற்றோர்களை விட அதிகமான அன்பையும், மனைவியை விட அதிகமான காதலையும், மக்களைவிட அதிகமான பாசத்தையும் வைத்திருக்கிறார்கள் என்றால் அஃது ஒரு சிறிதும் மிகையாகாது.
நுண்கலைச் செல்வர் அ. இராகவன்.
மேற்கை வெல்லும் கிழக்கு
மேலைநாட்டு அச்சு, கட்டுக்கோப்பு, அமைப்பு முதலிய வற்றை விஞ்சும் வகையில் தமிழ்நூல்களை அச்சிட்டுத் தவழ விட்ட பெருமை பிள்ளை அவர்களுடையதே.
- பேரா. அ.மு. பரமசிவானந்தம்.
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்
திரு.வ.சுப்பையா பிள்ளை அவர்கள் இந்த வயதிலும் இளமை உள்ளத்தோடு எறும்புபோல் சுற்றிச் சுற்றி உழைக்கும் உழைப்பை எண்ணும்போது இவரினும் சிறந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர் யார்? என்றே எண்ணத்தோன்றுகின்றது. இவரைப் போல் இன்னும் பத்துப்பேர் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த நாட்டின் வருங்கால வாழ்வு வையகம் வியந்து போற்றத்தக்கதாக விளங்கும்.
-டாக்டர்ந. சஞ்சீவி.