306
27
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
கொங்கு தேர் வாழ்க்கை
திரு.வ.சுப்பையாபிள்ளை அவர்கள் அருமையான அச்சிட்ட பழைய தமிழ்நூல்களை மிகவும் அரிதின் முயன்று, தேனீ தேனை மலர்கள்தொறும் தொலைவு பாராமல் சென்று சேகரிப்பது போல் விடா முயற்சியுடன் திரட்டி வைத்திருக்கின்றார். இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று கருது கின்றேன். ஜெர்மனி நாட்டில் ஆவே நகரில் அச்சடிக்கப்பட்ட தமிழ் நூல்களையும் மேலைநாட்டுத் தமிழறிஞர் ஜி.யூ. போப் அவர்கள் கையாண்ட நூல்களையும் இன்னும் இதுபோல் பலவற்றையும் அவர் சேகரித்து வைத்துள்ளார். இவற்றை அவருடைய தந்நலத்திற்காக இல்லாமல் பிறரும் பார்த்துப் படித்து ஆராய்ந்து மகிழும் வண்ணம் காட்சிக்கு வைத்து அருமையாகப் பேணி வருகின்றார்.
திரு. மா. சு. சம்பந்தன்.
செந்தமிழ்ச் செயல் வீரர்
திரு.வ. திருவரங்கம் பிள்ளை அவர்களின் கனவுகளை நனவாக்கிய திரு.வ.சு. தம் தமையனார் அமைச்சர் வ. தி. என்ற மலை மறைந்ததும் மயங்கிச் சோர்ந்துவிடாமல் வீறுடன் வினை செய்த வ.சு. வை மறப்பது எங்ஙனம்? செந்தமிழ்ச் செயல் வீரர் வ.சு.வாழ்க! வாழ்க! என வாழ்த்தி மகிழ்கின்றேன்.
வித்துவான் வீரசிவம்