35. பாமணி மாலை
திருநெல் வேலிச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் போலும்
ஒருநல்ல தமிழ்வளர்க்கும் நிறுவனமும் கண்டதில்லை உலகில் அந்த உரைமல்கு நிறுவனமும் முப்போதும்
தமிழுக்கே உழைக்கத் தக்க பெருநல்லான் தமிழ்ப்புலவன் சுப்பையன்
போற்பிறரைப் பெற்ற தில்லை.
நூலெல்லாம் விளையுமங்கே நூறாயி
ரக்கணக்கில் நூல்ஒவ் வொன்றின் மேலெல்லாம் அழகுசெய்யும் சுப்பையன் மிகுதிறமை அதுவு மன்றிக்
காலெல்லாம் சிலம்பொலிக்கத் தமிழரசி
உலகரங்கு காணும் வண்ணம்
தோலெல்லாம் சுளைப்பயன்கொள் புதுப்புதுநூல்
தோற்றுவிப்பான் அந்த மேலோன்.
புலவர் தமக்குப் புகலிடமாய் அன்னார்
நலனுற வேண்டுவன நல்கும் - நிலவுபுகழ்ச்
சுப்பையா மால்போல் துணையாவார் நெஞ்சேகேள்! இப்புவியில் வேறொருவர் இல்.
பாவேந்தர்.
பண்டித அ. பொன்னுசாமி பிள்ளை.
சைவம் ஒருகண் தமிழ்மறுகண் என்றக்கால்
ஐய! அவை ஒவ்வொருகண் ஆம்உனக்கே - மெய்யாய்ப்
பழகமே லாம்பயனைப் பாலிக்கும் அண்ணால்
கழகமே உன்னிரண்டு கண்.