உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

பதிப்பித்தார் பலவகை நூல் அதனால் பதிப்பித்தர் எனக்குறித்தல் பொருந்தும் குதிப்பித்தார் உளத்துவகை குவித்தார் குலவுதமிழ்ச் சுப்பையா குரிசில்.

309

கவிஞர் கோவை. இளஞ்சேரன்.

முத்தமிழ் வாழ்வே முதற்குறிக்கோள் என்றுள்ளம் வைத்த வ. சுப்பையா வாழியரோ - நத்தளவும் முத்து விழவயரும் மூவிரு பத்தேழிற் புத்துயிர் கொண்டு புகுந்து.

மொழிஞாயிற்று பாவாணர்.

சங்கத்தார் மூவர் சமயத்தார் நால்வருடன்

இங்கொத்தோர் மேனி எடுத்ததெனத் - துங்கமகன் தோன்றினான் தோன்றித் துணிந்து தமிழ்வளர்க்க ஊன்றினான் என்றும் உளம்.

ஓலைச் சுவடி உறைந்த பொருளெல்லாம்

மேலைப் புலத்தார் வியக்குவணம் - நூலையிவன் வண்ணவண்ணக் கட்டமைப்பா வைத்தான் திருப்பணியை

எண்ண எண்ண நெஞ்சமினிக் கும்.

அனிச்ச அடி திரு. ஆ. பழநி.

எப்பையா தமிழ்வளரும் எங்கையா தமிழ் நூல்கள் என்று கேட்டுச் செப்பையா விடையென்றே இடக்காகச் சிரிக்கின்ற சிறுமை மிக்க

தொப்பையா வயிற்றினிலோ ராயிரத்தெட்

டடியடித்த தூய னான சுப்பையா வேளோரா யிரத்தெட்டு நல்லூழி தொடர்ந்து வாழி.

- பேரா. ந. சேதுரகுநாதன்.

பாலென்றால் ஆவின்பால், பண்பில் அண்ணா, பலநாட்டார் விழைந்துதவும் கொற்கை முத்து, காலென்றால் பொதியிற்கண் தென்றற் காற்று.

கவியென்றால் கம்பன்கவி, இனிமை கன்னல்,