இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
சூலென்றார் யானைச்சூல், சுவைக்குப் பாட்டு தொல்சிறப்பு மொழியென்றால் தமிழே யாகும்; நூலென்றால் கழகத்து நூலேர யென்று
நுவலச்செய் வெளியீட்டு வேந்தே வாழி! அடிநாளில் மருத்தவத்தைக் கற்றி ருந்தால் ஆயிரத்தோ டொன்றாக உலக மக்கள் துடிநாடி ஆராய்வாய், தமிழுக் குற்ற
தொற்றுபிணி இளைப்பிற்குத் தொண்டு செய்யாய் குடிநாளில் மொழியின்நோய் போக்க என்றே கொணர்ந்ததுவோ தெய்வமுனை இலங்கைநின்றும் முடிநாடாக் காவலான! மூத்ததோர் ஏறே!
மும்மைத்தமிழ் மருத்துவனே வாழி! வாழி! சுழன்றும் தமிழலகம் சுப்பையாப் பிள்ளை முழங்கும் தமிழ்ப்பற்றின் மூள - வழங்கும் பலபல ஊழியவண் பைந்தமிழுக் கென்று நிலவுக நின்று நிலத்து.