உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. புரவலர் வழங்கிய போற்றுரை

1. அறிஞர்களுக்கு விண்ணப்பம்

28-1-'72

அன்புநிறைந்த அறிஞரவர்களே,

வணக்ம். கழகம் தொடங்கிய காலமுதல் கழகத்தை நிறுவிய என் தமையனார் திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்கள் தமக்கு வரப்பெற்ற புலவர் பலர் கடிதங்களைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அதேபோல் தமியேனுக்கு வரப்பெற்ற கடிதங்களை யானும் தொகுத்து வைத்திருக்கிறேன். தாங்கள் கல்விபயின்ற தங்கள் ஆசிரியன்மார் கடிதங்களும் தங்களிடம் இருத்தல் வேண்டும். அவற்றில் ஒருசிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தமியேனுக்கு அனுப்பி வைத்தால் படி எடுத்துக் கொண்டு அவற்றைத் தங்கட்குத் திருப்பி அனுப்பிவைப்பேன். மேனாட்டினர் இங்ஙனம் புலவர் கடிதங்களைத் தொகுத்து அச்சிட்டுள்ளனர் நம் நாட்டிலும் காந்தியடிகள், நேரு பெருமகனார், விவேகானந் அடிகள் முதலியோர் கடிதங்கள் நூல்வடிவில் வெளியிட பெற்றிருக்கின்றன. அம்முறையில் நம் தமிழ்ப்புலவர் கடிதங்களில் ஒரு சிலவற்றையாவது படங்களோடு அவர்களைத் தமிழ்நாடு மறவா வண்ணம் பதிக்கலாம் என்பது எனது கருத்து. யார் யார் கடிதங்கள் தங்களிடம் இருக்கின்றன என்பதை அன்பு கூர்ந்து இணைத்துள்ள அட்டையில் எழுதி அனுப்பும்படி வேண்டு கின்றேன்.

தங்கள் அன்பு மறுமொழி எதிர்பார்க்கும்

அன்புள்ள,

வ.சுப்பையா

கழக ஆட்சியாளர்.