328
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
2. பதிப்புத்துறையில் பதித்த பட்டறிவு
31-12-'52
உரையின் போக்கு நன்கு அமைந்திருக்கிறது. உரையில் மடை இடையே எழுத்துப் பிழைகள் காணப்பெறுகின்றன. பதவுரையில் பதம்பதமாகப் பார்த்து உரை எழுதப்பட்டி ருக்கிறது. தொடர் உரையாகக் குறள் பரி. உரை போல் இருத்தல் நன்று.இனி எழுதுவதை அவ்வாறு எழுதுதல் நன்று. சிறுபிள்ளை கட்குப் பதம் பதமாக எழுதலாம். தொடர் எழுதும்போது பதம் பதமாகப் பிரித்து எழுதி உரை எழுதுதல் நன்று.
மேற்கோள் பாடல்களுக்கு இடம் குறிப்பிடல் வேண்டும். நூலும் செய்யுள் எண்ணும் முதன்மை.
நச்சினார்க்கினியர் உரையை நயமாய் உரையை நயமாய் ஒன்றிரண்டு இடங்களில் கண்டித்தல் போதும். நச்சினார்க்கினியர் உரைக்கு மாறுப்பட்டுத் தாங்கள் எழுதுகிற இடங்களில் நச்சினார்க்கினியர் உரையை அப்படியே எழுதிவிடலாம். நம் உரையைப் படிப்பவர் நச்சினார்க்கினியர் உரை நூலை வாங்கிப் படிக்க வேண்டியதிராது.
அகல உரையில் ஒரே பத்தியாக ஒருபக்கம் இரண்டு பக்கம் எழுதுவதைக் கருத்து முடிவுக்கேற்பப் பல பத்திகளாகப் பிரித்து விடல் வேண்டும். இல்லையேல் படிப்பவர்கட்கு அயர்ச்சி ஏற்படும். கடின சந்திகளையும் உரைநடையில் பிரித்து விட வேண்டும். அச்சுக்கேற்றபடி சொற்களைச் - சொற்றொடர்கள்- இடம் விட்டு எழுதுதல் வேண்டும். ஒரு முறை ... உரையைப் படித்து எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்புவதோடு மேற்குறிப்பிட்ட குறைகளையும் நீக்கித் திரும்பிப் பதிவு செய்தனுப்புமாறு விரும்புகிறேன்.
அருஞ்சொல் சொற்றொடர் பொருள் விளக்க அகர வரிசை வரிஎண் கொடுத்து எழுதிச் சேர்த்தல் வேண்டும். பொருள் அகரவரிசையும் எழுதிச் சேர்த்தல் நன்று.