உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு க

329

3. நாட்டு நலன் நாடிய நற்றொண்டு

6-11-265

புலவர்கள் என்மீது தவறாகக் குற்றம்கற்பித்துப் பகை கொள்ளினும் யான் அவர்கள் புலமை நலத்தினை மறப்ப தில்லை. எப்போதும் அதனைப் பாராட்டும் இயல்பினன். என் மருமக்கள் மார்கட்கும், அவ்வாறே எனக்குப் பின்னரும் நடந்து வரும் படி தெரிவித்து வருகின்றேன்.

என்மீது அப்பழுக்கற்றபடி நம்பிக்கை வைக்குமாறும் அன்புகாட்டுமாறும் விரும்பி வேண்டுகின்றேன். அதனால் தங்கள் புலமைத் தொண்டு நம் மொழிக்கும் நாட்டுக்கும் பய மிகத்தரும். இதுகாறும் செய்த தொண்டு போதும் என்று தாங்கள் கருதுவதானால் இருபாலாரும் வாளா விருந்து காலந் தள்ளலாம். ஆனால் இறைவன் நம்க்ை கொண்டு ஆற்றுவிக்கும் பயனுடைத் தொண்டினால் ஏற்படும் அளப்பில் நன்மைகள் நம் நாட்டுக்குப் பயன்படாமல் ஒழியுமே!

இனி யான விரும்பும் பணிகளைத் தாங்கள் அன்புடன் ஏற்றுச் செய்து எனக்கு மனநிறைவு அளிப்பீர்கள் என்று நம்பிக்கை கொண்டே இவ்வாறு விரித்தெழுத வேண்டியதாயிற்று யான் வாழுங்காறும் யான் விரும்பும் பணிகளை ஏற்றுச் செய்து வருவதோடு எனக்குப் பின்னரும் யான் விரும்பி விட்டுச் செல்லும் பணிகளைக் கழகத்துககுச் செய்து வரும்படி வேண்டுகின்றேன்.

அவ்வாறே செய்வதற்குத் தங்கட்குச் செவ்விய நலனும் நீடுவாழ்வும் புரியும்படி அம்பலவாணர் பொன்னடி. களைப் போற்றி வேண்டுகின்றனன்.

தங்கள் அன்புள்ள,

வ.சுப்பையா.