334
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
8. தெய்வத் திருவருளில்திளைக்கும் நெஞ்சம்
5-1-1980
கழக இலக்கியச் செம்மல் அவர்கட்கு,
வணக்ம். கழகம் தோன்றுவதற்கும் இத்துணை அளவு வளர்வதற்கும் 1914 இல் என் தமையனார்க்கும் மறைமலையடி களார்க்கும் திருவருளால் ஏற்பட்ட தொடர்பே காரணமாகும். அப்போதே நூல்களைத் தொகுப்பதில் என் தமையார்க்குப் பெருவிருப்பம் ஏற்பட்டு அவர்கட்குப் பெரும் பொருள் தொகுத்துக் கொடுத்து வந்தனர். 1917இல் மீண்டும் அடிகளாரை இலங்கைக்கு வரவழைத்துப் பெரும் பொருள் தொகுத்துக் கொடுத்தனர். என் தமையனார் ஊருக்கு வரின் வி.பி.பி. யினைப் பெறுவர். அடிகளார் தொடர்பு என் தயைனார்க்கு ஏற்பட்டதும், 1920 இல் கூட்டுப் பங்கு நிறுவனம் தொடங்குமாறு 100 பங்குகள் எடுத்து ஆயிர ரூபா அருட்செல்வர் தி.செ. விசுவநாதபிள்ளை அவர்கள் வழங்கியதுமே கழகம் இப்போது பெரும் புகழொடு வளர்ந்திருப்பதற்குக் காரணம். அப்படி இணைப்பு ஏற்பட்டமை திருவருட் செயலே. மேலும் தொடக்க முதல்இன்று வரை தமியேன் கழகப் பணியினைப் பலதுறைகளில் ஆற்றுவது திருவருட் செயலே. தாங்கள் தமியேன் வரலாற்றை எழுத இசைந்து எழுதி வருவதும திருவருட்செயலேயாம்.
அண்மையில் கழக நூலாசிரியர்களில் புலவர் கோ. வே. பெருமாள் அவர்களும், புலவர் அரசு அவர்களும், என்.கே. வேலன் அவர்களும் பிரிவுற்றமை என் மனத்தைப் பெரிதும் வருத்துகின்றது. நூலக விழாவிலே எடுக்கப்பெற்ற படம் ஒன்றில் வேலன் அவர்கள் குடையைக் கையில்வைத்து நாற்காலியில் என்பக்கமாக அமர்ந்திருப்பது திருவருட் செயலே.
இங்ஙனம், வ.சுப்பையா.