உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்து அவர்தம் வாயுரை கேட்கவும் பெருவிருப்பாயினார். அதனால் அடிகளாரை ஆங்கு அழைத்தார்.

அடிகளார் அரங்கனாரைக் கொழும்பிலே 1914 ஆம் ஆண்டில் முதற்கண் கண்டார். கழிபேருவகை யடைந்தார். இளம்பருவச் செவ்வியும், வளம்பெருகிய உள்ளமும், பயின் றொழுகும் பண்பாடும், தாளாண்மை மிக்க வேளாண்மையும், தம்மாட்டுக் கொண்டுள்ள மாறாத அன்பும் அடிகளாரைக் கவர்ந்தன. விழா மேடையிலேயே அறுபத்து மூவர் நாயன்மார் களை யான் அறிவேன். ஆனால் இங்கே 64 ஆவது நாயனார் உண்மையை அறிந்து அளவிலா மகிழ்வுற்றேன்" என்று கூறி அவர் இவரே என்று அரங்கனாரை அவையினர்க்கு அறிமுகப் படுத்தி வியப்பில் ஆழ்த்தினார். அரங்கனாரை முன்னரே அறிந்திருந்தவர்கள் 'ஆமாம்' என ஏற்றனர். புதிதாக அறிந்தோர் என்முறுவர் பூத்து வரவேற்றனர். வள்ளுவரால் பாராட்டுப் பற்ற வளர்புகழ் வணிகச் செல்வன்போல, அடிகளார் பாராட்டு ரங்கனார்க்கு வாய்த்தது.

இவ்வாறு அரும்பி வளர்ந்த அடிகளார் அரங்கர் தொடர்பு பின்னே மேலும் வலுப்பெற்றது. அடிகளாரின் நூல் வெளியீடு விற்பனை ஆகியவற்றுக்கு உதவியதுடன் பெரும்பொருளை நன்கொடையாகத் தண்டியும் உதவினார் அரங்கர். 1917 ஆம் ஆண்டு மீண்டும் அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்தார். அப்பொழுது இளவல் வ.சு. கொழும்புக்குத் தேர்வு எழுது வதற்காகச் சென்றிருந்த காலம். ஆதலால், அடிகளார் தொடர்பு இவருக்கு வாய்ப்பதாயிற்று.

அடிகளார் குலசேகரபட்டினம் செந்திலாறுமுகம்பிள்ளை அவர்கள் வளமனையில் தங்கியிருந்தார். அவரோடு உடனுறைந்து உரையாடி மகிழும் பேறு இவர்க்கு உண்டாயது. பின்னாளில் யாழ்நூல் இயற்றிய பெரும்பேரிசையாசிரியர் விபுலானந்த அடிகளார் அந்நாளில் மயில்வாகனர் என்னும் பெயருடன் கல்லூரி மாணவராக விளங்கினார். அவர்அடிகளார் உறையும் வளமனைக்கு வந்து பைந்தமிழ் மொழி குறித்தும், செந்தமிழ்ச் சிவநெறி குறித்தும் ஆர்வமுறக் கேட்டும், ஐயுற்றன வினாவித் தெளிந்தும் செல்வார். அப்பொழுதெல்லாம் உடனிருந்து இன்பம் மாந்தும் பெரும்பேறு இவர்க்கு வாய்த்தது. அவ் வாய்ப்பால் அடிகளார்மேல்கொண்ட பற்றுப் பெருகிப் பெருகி முழுமதியாக இந்நாள் விளங்குதல் கண்கூடு.