உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

69

புரிந்தார். அரிதின் முயன்று விரைவின் நோய் தீர்க்கப்பாடுபட்டார். அதனால், ஒரு திங்கள் சம்பளமில்லா விடுமுறை பெற்று, நெல்லையில் ஓய்வு கொண்டு திரும்பும் அளவில் அத்துயர் தீர்ந்தது.

1925 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள்முதல் நெஞ்சில் கோழை உறைந்து இருமல் உண்டாயிற்று; உணவு செல்ல மாட்டமல் உடல் நலிந்தது. மாலையில் உடலில் வெப்பம் ஏற்பட்டு இரவு 10 மணிக்கு வியர்வை உண்டாகி வெப்பம் குறையும். நாள்தோறும் இந்நிலை தொடர்ந்தது. இராயபுரம் மருத்துவர் சின்ன சாமிபிள்ளையேமருத்துவம் புரிந்தார். அவர், வீட்டுணவு கொள்ளுதல் வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆதலால், பாளையில் இருந்து, அன்னையாரை வரச்செய்து அவர்ஆக்கித்தந்த உணவு உண்டார். ஆயினும் நோய் தீர்ந்த பாடில்லை! அரங்கர் சென்னைக்கு வந்தார். தம்பியார் உடல்நிலை அறிந்து வருந்தினார். அன்னையாயுைம் தம்பியாரையுட் பாளையங்கோட்டைக்கே அனுப்பி மருத்துவம் செய்விக்

வழிகண்டார்.

பாளையங்கோட்டையில் ஒரு சித்த மருத்துவர் இருந்தார். அவர் கீழைப்பாட்டம் திரு. பிச்சாண்டியாபிள்ளை என்பார். அவர் திறமிக்க சித்தமருத்துவர்; மலர்ந்த முகத்தர்; அன்புருவர். அவர்தம் உள்ளார்ந்த அன்போடு கூடிய மருத்துவத்தால்உடல் நலம் விரைந்து உண்டாகியது.

“முதற்கண் அவர்கள் பவளபற்பம் (நீறு) தந்து அதனை முசுமுசுக்கை இலையில் வைத்துக் காலையிலும் மாலையிலுமாக இரு வேளைகள் இருபத்தொரு நாள்கள் சுவைத்து விழுங்குமாறு கூறினார்கள். அவ்வாறு அம் மருந்தை உண்டபின் அறைவை மருந்து (செந்தூரம்) ஒன்று செய்து தந்தார்கள். அதனையும் அப்படியே இருபத்தொரு நாள்கள் பசுவெண்ணெயில் குழம்பி உண்ணுமாறு சொன்னார்கள். அவ்வாறு உண்டு வருகையில், வெப்பம் படிப்படியே குறைந்து வரலாயிற்று. அறைவை மருந்து உண்டு முடிந்தபின் இடிமருந்து (சூரணம்) கொடுத்து அதனைச் சருக்கரையில் விரவி உண்ணுமாறு சொன்னார்கள். அப்படி உண்டு வருகையில் ஒருநாள் வெப்பமானி (Thermometer) உடைந்ததும் வெப்பம் உரிய நிலைக்கு வந்ததும் திருவருட் செயலெனக் கருதிச் சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம் செலுத்தினேன்.'