உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

இவர்தம் நோய் நீங்கி உடல் வலிமை பெற நான்கு திங்கள் ஆயின. ஆயின், சென்னைக்கு வந்து பணிசெய்ய உடல்நிலை உடனே இடந்தராதெனக் கருதித் திருநெல்வேலித் தலையை நிலையத்திலே பணிபுரியுமாறு கட்டளை கிடைக்கப்பெற்றது ஆதலால், பாளையங்கோட்டையில் இருந்து கொண்டு திருநெல்வேலிக்குச் சென்று பணி செய்து வந்தார். நோயிலும் நெல்லை தலைமை நிலையப் பணியிலுமாக ஒன்பது திங்கள் சென்றன. பின்னே சென்னைப் பணிக்கு மீண்டும் சென்றார்.

சென்னைக்கு வந்தபின்னரும். இடைடையே இருமல் வாட்டியது. மலச்சிக்கலும் வலுத்தது. இடைஇடையே நீரேற்றக் கொண்டு குடரைத் தூய்மை செய்துகொள்ள நேர்ந்தது. குடலைத் சீர் செய்துகொண் அளவில் நலம்பெற்று விடுவதும் இல்லை! நெஞ்சில் கோழையும், பித்தமும் கூடித் துன்புறுத்தும. மீண்டும் திருவாளர் சின்னசாமிபிள்ளை மருத்துவமே துணையாயிற்று. இத்தனை நோய்த் தாக்கங்களுக்கும் இடையேதான் முயற்சி யாளர் தம் கடமையில் ஊன்றி நிற்கின்றனர். வெற்றி மிக்க வாழ்வினரெல்லாம் 'தொட்டாற் சருங்கி'யாக இருந்ததும் இல்லை! 'அழுகுணிச்சித்தரா'கப் புலம்பியதும் இல்லை.

"மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.

என்னும் பொன்மொழியைப் போற்றி ஒழுகினார் இவர்.

வாட்டிய நோய்கள் போதாவா? வ. சு. அவர்கள் குடும்பத்தை வருந்திய இழப்புகள், அம்மவோ! கொடுமை! கொடுமையினும் கொடுமை.

இவர்தம் மூன்றாம் அகவையிலேயே தந்தையை இழந்ததை அறிவோம். பதினேழாம் அகவையில், உடன் பிறந்த ஐயம் பெருமாள் இயற்கை எய்தினார். தம் பதினெட்டாம் ஆண்டிலே மூத்த அண்ணன் முத்துசாமி இயற்கை எய்தினார். அதற்கு அடுத்த ஆறாம் ஆண்டிலே திருஞானம் என்னும் செல்வக் குழந்தையை விட்டு வைத்து விண்ணுலகு புக்கார், செப்பருங் குணத்துக் குப்பம்மாள். அசையா உள்ளத்தையும் அசைக்கும் ஆறாத் துயரங்கள் அடுக்கடுக்காய் வந்தன. ஆனால் அரவ ணைத்துக் காக்க ஓர் அருமைஅண்ணன் திருவரங்கர் உடனிருந்தார்; வயிரமுத்துப்பிள்ளை வழங்கிய வள்ளற் செல்வங்களாகிய திருவரங்கரும், இளவலாரும் இணையிலா வயிரமும் முத்துமாக இலங்கினர்; உள்ளம் தளர்ந்தவர்களால் தாங்கிக் கொள்ளத்தக்க இழப்புகளோ இவை!