உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறட்கதிர் மாணிக்கம் ஆயினை;

விரல்கொள் நலத்தில் வீறுற்று வாழ்கவே!

-கோவை இளஞ்சேரனார்

வேலா அரசமா ணிக்கம்வினைமுடுக்கும் தோலாச் சுவைநூல் திருக்குறள் - ஆலாப் பரந்து நலம்பெருக்கும்பான்மைபோல்வாணாள் சுரந்து பெருகவர்க்குச் சூழ்ந்து.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இணையில்லாக் குறள்தோன்றி எத்தனையோ

நூற்றாண்டிங் கேகக் கண்டோம்!

துணையாகும் குறட்பெயரால் குறளாயம்

இவரால்தான் தோன்றக் கண்டோம்

அணைபோலக் குறளாறு தனைத்தேக்கி

மக்கள்மனம் அனைத்தும் பாய்ச்சும் இணையில்லா நம்வேலா அரசமா ணிக்கம் சீர் என்னே! என்னே! வித்தகராம் அரசமா ணிக்கனார் குறட் காற்றும் வியன்ப ணிக்கே

சித்தமிக உவந்தவராய்த் தமிழ்மனம்கொள் இராமலிங்கம் சிறந்த பட்டம்

இத்தினத்தில் குறள் நெறிக்கா வலர்என்றே

நாம்மகிழ ஈந்தார் அன்பு

முத்தமிழீர்! குறள் நெறிக்கா வலர்வாழ்க!

என வாழ்த்து முழங்கு வோமே!

பாட்டுத் தென்றல் பொதிகைச் செல்வனார்

குறளியம் வேலா குறள்போல் வாழ்கவே

அறம்பொருள் இன்பம் ஆக்கம் பெருகவே தனித்தமிழ்ச் செல்வன் தாளாண் வேளான் இனித்தநல் எழுத்தான் இயலிசை செழித்தான் பிறப்பும் சிறப்புமுறு பெருந்தகை யாளன் மறப்பற வள்ளுவர் வகுத்த வழியிலே வாழ்வாங்கு வாபம் வளம்பெறு செம்மல் தாழ்வுயர் சாதி தமிழனுக் கில்லை பிறப்பெல்லார்க்கும் பிரிவினை யில்லாச் சிறப்பென வழுத்தும் செந்தமிழ்ச்ச் செல்வன்