உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

பேச்சும் திருக்குறள் மூச்சும் திருக்குறள் மாட்சிமை சான்ற மனமும் திருக்குறள் காலம் விரும்பும் கல்விக் கடலோன் ஞாலம் அறிந்துநடக்கும் நல்லோன் எத்திசை மாந்தரும் இணைந்து வாழவே வித்தகப் பணிநலம் வீறுடன் விளைப்பான் அறத்தால் இன்பம் அன்பால் இன்பம் திறத்தால் இன்பம் திளைக்கும்இனியோன் நாளும் நாளும் நாளும் பொலிய ஞாலம் புகழ நமது வேலா

வாழிய நீடு வளம்பெறு குறளியம்

சூழிய உலகெலாம் சுவிசே சம்போல்

திருக்குறள் இன்பத் திகழுக வாழ்விலே

உருக்கும் உள்ளம் ஓங்குக நன்றே.

91

கவியோகி சுத்தானந்த பாரதியார்

“பொறுப்புடன் புலவர் நாங்கள் புதுச்சுவைக்காகச் செய்யுள் உறுப்பினை மாற்று கின்றோம் உம்முடல்தனிலுறுப்பை அறுத்தின்று மாற்றி யுள்ளார் அழகிய நயங்கள் சேர்க்கப்

பொறுத்தினிச் சுவைப்போம் எங்கள் புதுத்தமிழ் வெண்பா யாப்பே”

தமிழுறு நோயைத் தண்டமிழ்மறையைத்

தாக்கிய நோய்கைள யெல்லாம்

அமைகுற ளாய மருத்துவப் படையால்

அழித்தவன் தனக்குறு நோயைச்

சுமையெனத் தாங்கிக் கிடப்பனோ? அறுவைத்

துறையறி பண்டுவர் துணையால் துமியுறச் செய்தான் என்ற சொல் கேட்டுத் துள்ளிய தெம்முளம் களித்தே

"நன்னிலை பெறுவீர்; நம்குறள் வளர்ப்பீர்; மன்னிய அறுவை மகிழ்ச்சியை நிறைக்கும் கலவற்க என்றேன் வள்ளுவர் காத்தார்.'

தி. முருகுசுந்தரம்

புலவர் ஆ. பழநி

புலவர் இரா. வடிவேலன்