உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறளியம் ஆசிரியர்திரு. வேலா அவர்கள் உடல்நலம் தேவையான ஒன்று. அவரது உடல்நலம்திருக்குறள் இயக்கத்திற்கு அரண்.

தவத்திரு. குன்றக்கடி அடிகளார்

பிறரைப் போன்று தம் சிந்தனையையும் செயலையும் தொண்டையும் ஆற்றலையும் பல துறைகளில் அலையவிடாது திருக்குறள் சிந்தனையையும் திருக்குறள் தொண்டையுமே ஒருமுகச் சிந்தனையாக்கி வருவதுதான் வேலா அவர்களின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

-முனைவர் ஆறு. அழகப்பன்

"குறளாயம் என்ற தனி அமைப்பை அவர் நிறுவிய நிலையில், நான் சற்று மாறுபட்ட கருத்துக் கொண்டவனாக இருந்தேன். குறளாயத்தின் கொள்கைப் படைப்பின் விளைவாகத் திருவேலா அவர்களிடம் இடம் பெற்றிருந்த இலிங்கமும் திருநீறும் விடைபெற்றுச் சென்று விட்டன விழுமிய அக்காட்சி கண்டு வியந்தேன்! உருவமற்ற ஓர் இறைக்கொள்கை அவர் உள்ளத்தில் உருவாகி வள்ளுவத்தை வாழ்வில் மேற்கொள்ளும் தூய குறள் நெறியாளரானார். இந்த வெளிப்பாடு கண்டு என் கருத்து வேறுபாடுகள் கரைந்து பேயின."

குன்றாத குறள் ஆர்வலருக்கு உடல் நலம் குன்றிவிட்டது. குறள் நெறி பரப்புவதில் திறம் படச் செயல்படுபவர்க்குச் சிறுநீரகம் செயல்படவில்லை. மாற்றுக் குறையாத தங்கம் நிகர் உள்ளத்தவர்க்கு மாற்றுச் சிறுநீரக மருத்துவம்! இந்த வல்லோசை ஏனைய குறள் அன்பர்களைப் போல் என்னையும் தாக்கியது. அவர் வாழ்க.

தி. அ. சண்முகசுந்தரம்

தமிழ் மொழி வளரவும் குறள்நெறி பரவவும் அவரது தொண்டு பெரிதும் தேவையாகும்.

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி.

சென்னையில் தம் பிணிபோக்கும் பண்டுவத்துக்காகச் சென்றுள்ள நிலையிலும்கூடத் தமிழர்களை நெறிப்படுத்தும்தம் பணிக்கு முதன்மை கொடுத்திருப்பதை நேரில் கண்டு வியந்தேன். நெகிழ்ந்தேன்- போற்றி நின்றேன் ஆம்! சென்னையில் பிணிக்குப்