உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

93

பண்டுவத்துக்காகத் தங்கியிருக்கும் இல்லத்தின் வாயிற்கதவில் அறிவுப்புளது. குறள்வேள் வேலாஇராசமாணிக்கம் என்றா? இல்லை! திருக்குறள் நம் மறை என்ற சொற்கள் கொண்ட அறிவிப்பு.

மீ.சு.இளமுருகு பொற்செல்வி

இருபத்து நான்கு மணிநேரமும் குறட்பாக்களிலே மூழ்கித் திளைப்பவர் நம் வேலா அரசமாணிக்கனார்.

CC

மா.க. ஈழவேந்தன்

வள்ளுவனார் கண்ட வாழ்க்கைக் கோட்பாடுகளை அல்லது உலகியலைஏன் வாழ்க்கை நெறியாக ஆக்கக் கூடாது? என்று எண்ணினார்; எண்ணிய நம் அன்பரின் உள்ளம் திண்ணி யதாகலின் எண்ணிய வழியே செயல்படத் தொடங்கினார். குறளாயம் கண்டார். குறளாயத்தில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பங்கு கொண்டன. குறாளயத்தைச் சேர்ந்த குடும்பங் களின் செயற்பாடுகள் ஆர்ப்பரவமின்றி அடக்கமாக ஊர்களிலும் நகரங்களிலும் ஆங்காங்கு நடைபெறுகின்றன. குறள் கருத்தை விளக்குவதை விடக் குறள்வழியிலான குடும்பங்களைக் காணு வதில் மனநிறைவு கொண்டார். ஆங்காங்குக் குறளாயக் குடும்பங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அவற்றை ஊக்கினார். இப்படியே நாடுமுழுவதும் குறளாயக் குடும்பங்களாக ஆகாதா? என்ற எண்ணமும் ஏக்கமுமாகத்தான் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது வள்ளுவர் காலந்தொட்டு நிகழாத ஒருபுதியநெறி. ஒரு புதிய புரட்சி நெறி என்றே கூறலாம்.

பேரா.ந. இராமநாதன்

வேலாவின் தொண்டு பண்பு நலம் குறித்த தொகுப்பு மிகப் பெரிது; அப்பெரிதின் சுருக்கத்தின் சுருக்கத்தின் சுருக்கத் தொகுப்பே இது!

"ஈரோட்டை நினைத்தால் தன்மானத் தந்தை பெரியாரே முந்து நிற்கிறார்; அடுத்தாற்போல் நம் வேலாவே வந்து நிற்கிறார் என்று வ.சுப. மாணிக்கனார் சொன்னார் என்றால், மண்ணின் புகழைத் தம்புகழ் ஆக்கி விட்டார் வேலா என்பதை விளக்க வேண்டுவதில்லையே!