உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பட்டங்களும்

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பாராட்டும்

மாணிக்கனார், வேலாவை அஞ்சலில் “குறளாயத் தந்தை” எனச் சுட்டுவார்; குழித்தலைவர் பெரியவர் மீ.சு.இளமுருகு பொற்செல்வியார் "குறள் வேல்" என்பார்; கழக ஆட்சியாளர் 'குறளாயக் கோமான்' என்பார்; பலப்பலரும் "திருக்குறள் செம்மல்” “திருக்குறள் தென்றல்" என பல கூறுவர்.

திருக்குறள் நெறிபரப்பு மையம் வேலா அவர்களுக்குக் 'குறள்நெறித் தோன்றல்' என்னும் சிறப்பளித்துப் பாராட்டியது.

பம்பாய் திருவள்ளுவர் கழகம் 'திருவள்ளுவர் விருது' வழங்கத் தீர்மானித்து வேலாவை அழைத்தது. அவர் தம் உடல்நிலை அப்பொழுது ஏந்தாக இல்லாமையால் சென்று வாங்குதற்குக் கூடவில்லை.

ஈரோடு கருங்கல் பாளைய இளைஞர் நற்பணி மன்றமும் திருமணப் பண்டக உரிமையாளர் திரு.கு. இராமலிங்கனாரும் 13- 5-89 இல் இணைந்து நடாத்திய முப்பெருவிழாவில் "குறள் நெறிக்காவலர்" என்னும் பட்டம் வழங்கிப் பட்டாடை போர்த்திச் சிறப்பித்தனர். விழாவுக்குப் பெரியார் மாவட்ட ஆட்சித் தலைவர் வி.கே. குப்புராசு இ.ஆ.ப. தலைமை ஏற்றார். முத்தமிழ்க் காவலர், பெரியவர் செ.ந. குப்புமுத்து ஐயா, பாவலர் பொதிகைச் செல்வனார், தமிழ்க்குமரனார், இளங்கோப் பாண்டியனார் ஆகியோர் வேலாவின் பணிநலம் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர். பேரா.உ.பாலசுப்பிரமணியனார் நன்றியுரைத்தார்.

புதுவை மாநிலக் குறளாய மாநாடு 15-1-90-ஆம் நாள் பொது நிலைக்கழகத்தே நிகழ்ந்தது. புதுவைக் குறளாயம் சார்பில் வேலா அவர்களுக்குத் 'திருக்குறட் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினர். விழாத் தலைமை பா.சு. அரியபுத்திரனார் ஏற்றிருந்தார். குறளாய மாநாட்டுக் குழுவினர் வேலாவின் தொண்டைப் பாராட்டிப் பேசினர்.

உலகத் திருக்குறள் உயராய்வு மையம் 13-4-90-இல், 'குறள்நெறிச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட் டெடுத்தது.