உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

தமிழ்ச் சான்றோர் நெருக்கம்

95

வேலா பள்ளியில் படித்த கால முதலே தமிழ்ச் சான்றோர் தொடர்பில் இருந்ததையும் அவர்களை மதித்துப் போற்றியதையும் அறிந்துள்ளோம். அவ்வகையில் தந்தையார் காலத்திற்குப் பின்னர்க் குறளியம் குறளாயத் தொடர்பால் உண்டாகிய பெரு மக்கள் தொடர்பு எண்ணிக்கையில் மிகப் பெருக்குடைய தாகும். தமிழ் அறிஞர்கள் உணர்வாளர்கள் என எவரெவர் விளங்கினரோ அவர்களையெல்லாம் வேலா மதித்துப் போற்றினார். அவ் வகையில் பன்மொழிப் புலவர் அப்பாத் துரையார், பாவாணர், அறிஞர் வ.சுப.மாணிக்கனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் சாலையார் என்பார் குறிப்பிடத் தக்கவர்கள்.

இனிக் குறளியம் குறளாயப் பணிகளை வேலாவுடன் ஒன்றாகி உடனாகிப் பார்த்துவரும் பெரும்புலவர் பட்டுக்கோட்டை மீ.தங்கவேலனார், செயற்கரும் செயல் பெரிது! இனித்தொடக் கத்திலும் இடையிலும் அவ்வப்போதுமாகப் பேரா. மு.ச. சிவம், பாவை நடராசர், பொதிகைச் செல்வர், பேரா. உ. பாலசுப்பிரமணி யனார், செய்து வந்துள்ள தொண்டுகளும், சொல்லிலும் செயலிலும் காத்துச் சிறக்கும் பாவலர் ஈவப்பனார் தொண்டும் கருதி மகிழத் தக்கன.

ஓர் அமைப்பின் சிறப்பு அதன் தலைமையாலும் கொள்கை யாலும் சிறப்புறுவதுடன் சார்ந்து நின்று கடமை புரிந்தவர் உள்ளொத்த துணையாலும் உணர்வுப் பங்களிப்பாலும் சிறப்புறும் என்பதற்கும் இப்பெருமக்கள் கூட்டுறவு பெருந்து ணையாக இருந்தது; இருந்தும் வருகின்றது அமைப்புப் பற்றிய செய்திப் போக்குவரத்து, இதழ் அச்சீடு என்ற அளவில்தான் பிறரால் துணை நிற்க முடியும். ஆனால், இத்தகைய புலவர் பெருமக்களால் அமைப்பு இயக்கப் பயன்பாடும், இதழ்ச் செய்திக் கொடைப் பயன்பாடும் ஒருங்கே ஏற்படுதற்கு வாய்த்த மையால் வேலா, முழுமையாகக் கருத்துக் கூறுதல், கட்டளை இடுதல், கையெழுத்து இடுதல் என்ற அளவில் அமைந்து மற்றைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது. இனிப் புலவர் ஆறுமுகனார், புலவர் பொதிகைச் செல்வனார், புலவர் வடிவேலனார், பாவலர் ஈவப்பனார் இன்னோர் உழுவலன்பும் ஒத்துழைப்பும் குறளா யத்திற்குக் கடைத்து வருதல் வேலாவின் சால்புச் சீர்மையின் பயனேயாம்.