உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இனிக் குறளாயக் கிளைகளைச் சார்ந்த பெருமக்கள் பணியும் குறளாயப் பணியின் விரிவாக்கமே யன்றோ! அவற்றைப் பற்றியும் அப்பணியில் ஊன்றிய, பெருமக்களின் உதவிப் பாடு என்பன பற்றியும் 'குறளாயப் பகுதி'யிலே காணலாம்.

வேலா -தனி ஒருவரல்லர்! அவர் ஒரு நிறுவனம்; அவர் ஓர் இயக்கம்!

வேலா ஒரு நிறுவன - அமைப்புப்-பொறுப்பாளர் மட்டும் அல்லர்! அவர் அரிய செயலர்; பெரிய பொருளர்! உரிய தொண்டர்!

குறளிய - குறளாய நிகழ்ச்சிகளா? வேலா நிறுவனங்களே முந்து நின்றும் வந்து நின்றும் பணி செய்யும்! வேலாவின் அமைப்பு கட்டொழுங்கு அத்தகைத்து!

வேலா நடத்தும் விருந்தா? விடுதி விருந்தா இராது! வீட்டு விருந்தாகவே அமையும் நிறுவனங்களே இயைந்து கடனாற்றும் ஒழுங்குடையதெனின், வீட்டைச் சொல்வானேன் அம்மையார், மக்கள், மருகர் அனைவரும் கடமைகளைத் தாம் தாம் தாம் எடுத்துக்கொண்டு செய்யும் போது எவ்வளவு பெரும் பொறுப்பும் எளிமையாகிப் போய்விடும் அல்லவோ!

வேலாவுக்குத் திருக்குறளே வாழ்வு!

திருக்குறளே மந்திரம்!

திருக்குறளே தவநெறி!

திருக்குறளே வைப்பகம்!

திருக்குறளே துய்ப்பகம்!

திருக்குறளே அமிழ்து!

திருக்குறளே மருந்து!

திருக்குறளே வாழ்வாக உடையவேலா

திருக்குறள் போலவே வாழ்தல் உறுதியன்றோ.