உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருக்குறள் பேரவை

அடிகளார் தொண்டு

1974-இல் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் திருக்குறள் பேரவை என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். செல்லுமிடங் களில் எல்லாம் திருக்குறளில் அமைந்துள்ள புரட்சிக் குறிப்புகளை எடுத்து வைத்து, அவையோர் குறிப்புகளைத் தம்பால் ஈர்த்துக் கொண்ட அடிகளார், அப்பட்டறிவின் துணையிலேயே அவ்வமைப்பைக் கண்டார். திருக்குறளில் அமைந்து கிடக்கும் சைவசமயக் கோட்பாட்டளவில் நில்லாமல், மேனிலையாம் பொதுமை இறைக்கொள்கை, ஆள்வினைக் கொள்கை, அரசியல் கொள்கை, பொருளியல் கொள்கை, அரசியல் கொள்கை, பொருளியல் கொள்கை, குமுகாய இயல் கொள்கை, வாழ்வியல் நெறி என்பனவெல்லாம் ஆய்வுப் பொருளாய் - பட்டிமன்றப் பொருளாய் வழக்காடு மன்றப் பொருளாய் -கருத்தரங்கப் பொருளாய்-பட்டிமன்றப பொருளாய் வழக்காடு மன்றப் பொருளாய் கருத்தரங்கப் பொருளாய் கலந்துரையாடற் பொருளாய்ப் பெருநகர் சிறுநகர்களோடு பட்டிதொட்டி களிலும் பரவச் செய்தார்! வெளிநாட்டுச் செலவுகளில் தாம் கண்ட புதுமை புரட்சிக் கருத்துகளுக்கும், திருக்குறள் இடம் தந்து நிற்பதுடன், அதனினும் மேலோங்கி நிற்கும் கருத்துகளும் ஆழ்ந்து கிடப்பதையும் எடுத்து வைத்துத் திருக்குறட் சிந்தனையை நன்கு பரவ விட்டார்; பரப்பினார். அப்பரப்புதலுக்குப் பரப்பகமாகவும் -பலரையும் அப்பணியில் ஆட்படுத்தி வினை யாற்ற ஊக்குவதாகவும் அமைக்கப்பட்ட அமைப்பே திருக்குறள் பேரவையாகும்.

வேலாவின் அணுக்கம்

-

-

இயல்பாகவே திருக்குறள் பற்றுமையும், ஊன்றுதலும் உள்ள வேலாவுக்கு அடிகளார் அழைப்பும் அமைப்பும் "கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ!" என அப்பர் அடிகள் அழைத்த அழைப்பாகவே தோன்றிற்று. அதனால், அடிகளார்