உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

பால் வயப்பட்டார்; அமைப்பின்பால் வயப்பட்டார். இந் நிலையில் 1977-இல் அடிகளாரை அழைத்து, பொங்கல் விழாவை ஈரோட்டில் சிறப்பாக நிகழ்த்தினார் வேலா. பேரவையில், மண்டலச் செயலாளராக வேலாவை அடிகளார் அமர்த்தினார். 1978-இல் திருச்சியில் மாநில மாநாடு நிகழ இருந்தது.

அப்பொழுதில் திருக்குறள் பணியில் முந்து நின்று பாடுபடும் பெருமக்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டும்; ஒருங்கு கூடி ஒருமைப்பாகப் பாடுபட வேண்டும் என மடல் விடுத்து முத்தமிழ்க் காவலர், அடிகளார், திருக்குறளார், பாவலரேறு ஆகியவர்களை அழைத்து ஓரரங்கில் கண்டு களித்தார்.

அம் மாநாட்டின் திறப்புவிழாப் பொழிவை வேலா நிகழ்த்தினார். பின்னர் அடிகளார் திருக்குறள் பொழிவுக்கு எங்கெங்குச் சென்றாலும், மாநாடு, விழா நடத்தினாலும் வேலா மிக அணுக்கமாயினார். பேரவையின் செயல்விளக்க -விளம்பரக் கருவியாக 'ஓரிதழ்' தொடங்க வேண்டும் என்னும் தூண்டலை முன்வைத்தார் அடிகளார். அதனால் 1980-இல் குறளியம் கிளர்ந்தது. அடிகளார் விரும்பியது போலவே பேரவைச் செய்தி களைச் சிறப்பாகக் குறளியம் வெளியிட்டது. அடிகளார் கட்டுரைகளையும் இதழ்தோறும் வெளியிட்டது.

முதல் இதழை வெளியிட்டு வாழ்த்துமுரைத்தவர் அடிகளார். அவ் விதழில் "புதியதோர் தமிழினம் படைப்போம் என்று மடிதற்று முந்துற்ற தமிழ்மாமுனிவர் தவத்திரு அடிகளாரின் நெறிமுறைகளுக்குத் தோள் கொடுத்துத் துணைபுரியக் குறளியம் விழைகின்றது. தமிழர்கள் இதுவரை அரசியலால் ஒன்றுபட முடியவில்லை. சமயங்களால் ஒன்றுபட முடியவில்லை. கட்சி களால் ஒன்றுபட முடியவில்லை. தமிழர்கள் ஒன்று படுவதற்குத் தனிப்பெரும்வழி தமிழர்களின் நெறி விளக்காகிய திருக்குறள் ஒன்றே. குறள்வழி ஒன்றுபடுவோம். குறள்நெறியை உலகெங்கும் பரப்புவோம். குறள்வழி நடப்போம்.

தமிழன் தலைநிமிர்ந்து நிற்கத்தக்க துணையாய் இருக்கும் குறளைப் பரப்பி வரும் மாநிலத் திருக்குறட் பேரவையின் தொண்டுகள் தமிழக வரலாற்றில் இடம்பெறத் தக்கவை” என்பது "மாநிலத் திருக்குறள் பேரவை" என்னும், கட்டம் கட்டிய செய்தியின் ஒரு பகுதியாகும்.