உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

ஏன் திருக்குறள் பேரவை

99

அவலநிலையில் இருந்து தமிழகத்தை மீட்க மாந்த குலத்தை மீட்க - உள்ள ஒரே வழி திருக்குறளை வாழ்வியல் அறமாக, வாழ்வியல் சட்டமாக ஏற்றுக் கொள்வதுதான்! திருக்குறள் பேரவை, இந்த முயற்சிக்காகத் தொடங்கப் பெறுகிறது.

"திருக்குறள் பேரவையின் முதல் நோக்கம் திருக்குறளை முழுதாகக் கற்றல், திருக்குறளை திருக்குறள் கருத்தை கொள்கைகளை - கோட்பாடுகளை - வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தி சோதனை செய்து வெற்றிபெற்ற அறிஞர்களை திருக்குறள் அறிஞர்களாக ஆகும் முயற்சியில் ஈடுபட்டவர்களை ஒருசில நூறு பேர்களையாவது படைத்திடுவது என்பதுதான். வாழ்க்கை யின் அனைத்துச் சிக்கல்களுக்கும் திருக்குறள் தீர்வு காண்பது என்பது திருக்குறள் பேரவையின் குறிக்கோள். குமுகாய நெறிகளை வளர்த்து, வள்ளுவத்தைக் கருவியாகப் பயன்படுத்துதல் திருக்குறள் பேரவையின் நோக்கம் இன்ன பல கருத்துக்களை விளக்கி ஏன் திருக்குறள் பேரவை என்னும் அடிகளார் கட்டுரை மூன்றாம் இதழில் வெளிவந்தது.

22-2-80 இல் வேலவைப் பெரியார் மாவட்டத்திருக்குறள் பேரவை அமைப்பாளராகச் செயல் படப் பணித்த அடிகளார் ஆணையும் திருக்குறள் பேரவை மாநில மாநாடு இரத்தின கிரியில் நடக்க இருப்பது குறித்த விளம்பரமும் மூன்றாம் இதழில் டம் பெற்றன.

"திருக்குறள் வாழ்க்கைச் செயற் குறிப்புகள்" என்னும் அடிகளார் தொடர் கட்டுரை நான்காம் இதழில் தொடங்குகிறது.

"கோள்களையும் காலங்களையும் நம்பி நாளும் ஏமாறும் மாந்தர்க்கு விழிப்புணர்வு ஏற்படுமாறு, இராகு காலத்தில் தொடங்கப்ப்ட இரத்தினகிரி திருக்குறள் பேரவை இரண்டாம், மாநில மாநாட்டுச் செய்தியை 'வீரவேல்' என்னும் புனை பெயரில் ‘வேலா'வே தொகுத்து வழங்கி உள்ளார். (இதழ் - 14)

8-2-81 இல் கோவை திருக்குறள் பேரவை மாநாட்டில் நிகழ்ந்த கருத்தரங்கில் பங்கு கொண்டார் வேலா.

குறளியம் முதலாண்டு நிறைவின்போது அடிகளார் இனிய வாழ்த்துரைத்து அதன் தொண்டு நலம் பாராட்டி ஊக்கினார்: