உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

"திருக்குறள் ஓர் இயக்க நூல்.ஆனால், சென்ற காலத் தமிழக வரலாற்றில் திருக்குறள் இயக்கமாக இல்லாமல் இலக்கிய மாக்கப் பெற்று விட்டது வடபுல நாகரிக விரும்பிகள் திருக்குறளை அறநூலாகவுமம் விளக்கமடைய முடியாமல் திருக்குறளை இலக்கியமாக்குவதில் முனைந்து நின்றர். விளைவு, தமிழகம் திருக்குறள் நெறியில் இருந்து முறை பிறழ்ந்தது. திருக்குறள் இயக்கநூல் என்றால் என்ன பொருள்? திருக்குறள் குமுகாயத்தின் அனைத்துத் துறைகளையும் இயக்கும் ஆற்றலுடைய உயர்ந்த நூல் என்பதாகும். ஆனாலும், இயக்க நூல் என்பதால் அறம் தழுவியதன்று என்று பொருள் கொள்ளக்கூடாது. திருக்குறள் ஒரு முழுமையான குமுகாய நூல். இந்தத் தலை முறையில் தமிழகத்தைத் திருக்குறள் நெறி தழுவிய நாடாக ஆக்க வேண்டும் என்பது திருக்குறள் பேரவையின் குறிக்கோள்.'

குறளியச் சீர்த்தி

இக்குறிக்கோளை அடைவதற்குத் தலை சிறந்த கருவியாக விளங்குவது குறளியம்.

குறளியம் அயல் வழக்குக்கு 'எரிநெருப்பு' தமிழ் நெறிக்கு அரண்!

"குறளியம் தமிழராய்ப் பிறந்து தமிழராய் வாழும் எல்லாரும் படிக்க வேண்டிய ஓர் இதழ்.

"குறளியத்தைத் தமிழர் நலம் கருதி பொருள் இழப்பையும் பொருட்படுத்தாது அருமைக்குரிய வேலா இராச மாணிக்கனார் நடத்தி வருகிறார். தமிழ் நெஞ்சமுடைய அனை வரும் குறளியம் வாங்கிப் படிப்பது கடமை. குறளியம் வளர்வது தமிழகத்தின் எதிர்கால வரலாற்றுக்கு அடிக்கல் என்பதை மறவற்க. ஓராண்டு வளர்ந்துள்ள குறளியத்துக்கு வாழ்த்துக்கள்.”

குறளியத்தின் கொள்கை இதுவென எவ்வளவு தெளிவாகக் கூறுகிறார் அடிகளார். குறளியம் “தலைசிறந்த கருவி”; “அயல் விழக்குக்கு எரிநெருப்பு"; "தமிழ் நெறிக்கு அரண்' என்பன வெல்லாம் எத்தகைய தேர்ச்சியுரைகள்: தேர்ந்த வழிகாட்டுதல்கள்! பேரவையில் வேலா பங்கு

சார்பில்

23-8-81 இல் அவலூர்பேட்டையில் திருக்குறள் பேரவையின் "பொதுவுடைமைச் சமுதாயம் மலர்வதற்குத் திருவள்ளுவர் வழிகாட்டத் தவறிவிட்டார்" என்று குற்றம் சாட்டி வழக்காடு மன்றம் நிகழ்ந்தது. நடுவராக அமர்ந்த வேலா,