உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

சேலம் மாவட்டத்திருக்குறள் பேரவை மாநாடு 22-11-81- இல்நிகழ்ந்தது. பட்டிமன்றத் தொடக்கவுரையாற்றிய வேலா, திருக்குறள் வாழ்வியல் வெற்றி பெறச் சமய வழியிலோ அரசியல் வழியிலோ தலைமை ஏற்க வேண்டும். இதற்கோர் முடிவொன்று வேண்டும்" என்றார் அடிகளார் அவர்கள், "பேரவையின் குறிக்கோளின் படி செயலுறுங்கள்; இது போன்ற மாநாடுகள் விழாக்கள் இனிப் பயன்தரா; யானும் விரும்பவில்லை. சிறு எண்ணிக்கையினராக இருந்தாலும் செயல்வீரர்களுடன் மனம் விட்டுக் கலந்துரையாடும் நிகழ்ச்சியிளையே விரும்புகிறேன். திராவிடம், இந்துமதம் என்கிறார் நம் வேலா. இவையனைத்தும் குறளியத்திற்கு ஒவ்வாத தன்றோ" என்று கூறினார் (குறளியம் 2:5) அறை கூவல் ஆய்வு - விளைவு :

ஓர் ஆண்டு ஓடட்டும்! உறுதியுடன் நாம் நிற்போம்! என்னும் தலைப்பிட்ட ஆசிரிய உரையுடன் 1-1-82 இதழ் (2:6) வந்தது. அதில் “நாம் எவற்றை ஒதுக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ, அவை நம்முடனேயே பிரிக்க முடியாத அவல நிலையில் இணைந்திருப்பதால் அழித்தால் நாமும் அழிந்து விடுவோமோ என்ற அச்ச உணர்வின் ஏதிலிகளாய் ஆட்பட்டுக் கிடக்கின்றோம்."

இவற்றிற்கோர் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனையுடன் பிறந்த குறளியம் நவம்பர்த் திங்களிதழின் ஆசிரியஉரை, எதை எண்ணி எதிர்நோக்கி எழுதப்பட்டதோ அது முகிழ்த்து விட்டது. ஆம்! நம் தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் மடல்வழி அச்சிந்தனை உறுதியுடன் தெளிவுடன் மெய்யுணர்வுடன் தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அதுவே 'திருக்குறட் சமயம்' இனி, அந்நிலைக்கு ஆட்படலும் ஒருப் படலுமே நாம் செய்ய வேண்டிய பணி.பேசி வந்த காலம் முடிந்து, செயற்படும் காலம் வந்து விட்டது. நம்மை ஏன் நம்மை மட்டுமல்ல; இந்த மாந்தக்குமுகாயத்தையே உய்விக்கவல்ல திருக்குறட் சமயத்தின் தொண்டருக்கும் தொண்டனாய், உறதிப்பட நிற்கும் உள்ளத்தினனாக என்னை ஈகம் செய்ய முடிவு செய்துள்ளேன். நீங்களும் வரச் சிந்தியுங்கள்.

நாம் பிறந்து வளர்ந்து மேற்கொண்ட சமயம் அல்லாது வேறொரு சமயம் காண்பதா எனத் தயங்கினால் குடிகாக்காது. மேலும் பல நூற்றாண்டுகள் கழிவதொன்றே நடக்கும்.