உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

-

இளங்குமரனார் தமிழ்வளம் 28

அமைய வேண்டும். இதனை முதலில் மாவட்ட மாநாடுகளில் தீர்மானங்கள் மூலம் வலியுறுத்த வேண்டும். திருக்குறள் பேரவையைச் சேர்ந்த நமக்குள் குறிப்பிட்ட 50 பேர்கள் கூடித் திருக்குறட் சமயக் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் வடிவம் தருதல் வேண்டும். இவ்வகையான முயற்சியில் ஈடுபடுவது வளர்ந்து வரும் வரலாற்றுப் போக்குக்கும் உலக அளவில் நமது சமய நெறியைக் கொண்டு செல்வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இது தங்களுக்கும் உடன்பாடானதாகவே இருக்கும் என்றும் நம்புகிறோம். அன்பு கூர்ந்து இக்கருத்துக் குறித்து ஆலோசித்து எழுதுங்கள்; முயற்சி செய்கிறோம். இந்துமதம் என்ற கட்டில் இருந்து விடுபட்டு இயங்குவதற்கு இஃதொன்றே வழியாக இருக்கும். இவ்வகையில் தங்களுடைய எழுச்சி நிறைந்த கருத்துக்களைச் சேலம் மாநாட்டில் கூறிய மைக்குப் பாராட்டு.நன்றி."

3-12-81-இல் அடிகளார் இப்படி எழுதுகிறார். ஆனால் ஆர்வத்துடிப்பு உடையவர்கள் உடனே கடிதங்கள் எழுதிப் பரபரப்பாக்குகின்றனர். அதனால் அடிகளார் 16-12-81-இல் "ஏன்? இப்பொழுதே எழுத ஆரம்பித்துள்ளார்கள். குறளியத்தில் 'ஓர் ஆண்டு விவாதம்' செய்த முடிவுக்கு வரலாமே! இது தொடர்பாக வரும் கடிதங்களை வெளியிடுங்கள். நாம் பதில் எழுதுகிறோம். பின் முடிவு எடுக்கலாம்" என்று எழுதுகிறார்.

அதன் மேன்மடலாகவும் நிலைவிளக்கமாகவும் வேலா எழுதுகிறார் :

"தவத்திரு அடிகளார் நம்மை ஓராண்டு சிந்திக்கச் சொல்லி மடல் எழுதி விட்டார். ஏன் எனச் சிந்தித்துப் பார்த்தேன். வெறும் சொல் வீரர்களாகத்தான் இந்த இனம் வாழ்ந்து வருகின்றது என்ற எண்ணம் இருக்குமோ என்ற சிந்தனையும் சுழலிடுகிறது. உண்மையும் அதில் உறைந்து தானே இருக்கிறது. எதை நம்பி இந்த இனத்திற்கு வழிகாட்டுவது? திராவிட வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் இன்றிருக்கும் நிலையைப் பார்க்கும் போது நெஞ்சு கொதிக்கத் தானே செய்கிறது. ஈராயிரம் ஆண்டு அடிமை வாழ்க்கையை ஈராயிரத்து ஒன்றாக மாற்றிக் கொள்வதில் ஒன்றும் இழந்துவிட மாட்டோம். ஆனால், முடிவு நல்ல முடிவாகத் தோன்ற வேண்டும். தோன்றும் என்பதற்கு முன் எடுத்துக காட்டாய் நிகழ்ந்த நிகழ்ச்சியை உங்கட்கு உணர்வுடன் சொல்லிக் கொள்கிறேன்.