உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதி பிறந்தது

ஈரோடு வேலா (வரலாறு)

105

ஈரோட்டில் 20-12-81 அன்று பெரியார் மாவட்டத் திருக்குறள் பேரவைச் செயற்குழுக் கூட்டம் கூடியது. அதில் அடிகளாரின் மடலையும் அதை ஒட்டி எழுதப்பட்ட சிந்தனையாளர்களின் மடல்களையும் படித்துக் காட்டினேன். கலந்துரையாடல் மிகச் சூடு பிடித்தது. சைவ சமய மடத்தில் இருந்து கொண்டு வேறு ஒரு சமயம் படைக்கும் வீரமும் சிந்தனையும் அடிளாருக்கு வந்ததையும் வியப்புடன் குறிப்பிட் டனர் பலர். பேச்சு மேலும் சூடு பிடித்தது. பல திக்குகளில் சிந்தனைகள் ஓடின. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, இன உணர்வு ஆகியனவும் மோதின. 'திருக்குறளை நம்புபவர் நெற்றியில் பொட்டு எதற்கு பூச்சு எதற்கு?' என்று கேள்வி பிறந்தது. மனத்துக்கண் மாசிலனாவதே திருக்குறள் சமயம்எனச் சொல்லிவந்த ஈரோடு திருக்குறள் பேரவைத் தலைவர் திரு. பெரியண்ணன் அவர்களை நோக்கி இக்கேள்வி வீசப்பட்டது. மணிவிழாக் கண்டு திருக்குறளை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் அப்பெரியவர் சிந்திக்கக்கூட நேரம் எடுத்துக் கொள்ளாது நம் சந்தனப் பொட்டையும் பூச்சையும் நீக்கித் தம் உள்ளத்தை மட்டுமன்றி, உடலையும் திருக்குறளுக்கு ஈந்த காட்சி என் மெய்யெல்லாம்சிலிர்க்கச் செய்தது. அவையே அளக்க ஒண்ணா வியப்பெய்தியது!"

என் உள்ளத்தில் பளிச்சென ஓர் ஒளி பிறந்தது. ஆம்! திருக்குறள் வழி ஒரு குமுகாயம் பிறந்து விடும் என்ற உறுதி பிறந்து விட்டது ஆனால், பல உள்ளங்களில் எழும் ஒரே சிக்கல் 'சமயம்' என்ற சொல் திருக்குறளின் துணை சொல்லாக வேண்டாம். வேறு சொல் வேண்டும் என்பதே. வாருங்கள் - சொல்லுங்கள் சிந்திப்போம் செயல்படுவதில் உறுதியாய் நிற்போம்.

-

தவத்திரு அடிகளார் அவர்கள் ஓராண்டு சிந்தனையில் ஓடட்டும் என்கிறார். ஆனால் நாம்உறுதியுடன் நிற்போம். உறுதியிருப்பவர்கள் ஒருப்படுபவர்கள் ஒன்றாகுக்ஙள். சிந்திப்போம்; சிந்திப்பவர்களையும் ஓரணியில் சேர்போம். வரும் சனவரி 15 ஆம் நாள் நம் தெய்வத்தின் திருநாள். இல்லந்தோறும் விழா எடுங்கள் என்னும் வேலா, சிந்தனைக் கடிதங்களை வரவேற்று, அவற்றைக் குறளியத்தில் வெளியிடுவது பற்றியும் அறிவிக்கிறார். (2:6:4)