உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

119

உட்பகை ஒழித்து

குடி செயல்வகை அறிந்து

மானம் நோக்கிப்

பெருமை சேர்க்கக்

குடிமை காக்கச் சரியான காலம் வந்து விட்டது!

உலகத் தமிழ் மாநாட்டை மதுரை மாநகரில் நடத்துங் காலம் வந்துவிட்டது. தமிழுக்குற்ற இன்றைய தலைவர்களோ குடிமை காத்த அண்ணாவின் வழிவந்தவர்களோ மாமியார் மருமகள் தாக்கங்கள் போலக் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்ற பேதைமை நிலையை ஏற்றால் என்னென்பது! அரசியலில் நீங்கள் எப்படியோ இருங்கள். அதைக் காலமும் மக்களும் முடிவெடுக்கட்டும். அதைப்பற்றி இஞ்ஞான்று யாமும் சிந்திக்கவில்லை.

தமிழினத்திற்கே பெருமை சேர்க்கும் உலகத் தமிழ் மாநாட்டின் போது நாட்டின் தலைவர்களிடையே இத்துணைப் பகை ஆகலாமா? வேறுபாடு தமிழில் - தமிழ் மாநாட்டில்தான் காட்டலாமா கலைஞர் இல்லாதோர் உலகத் தமிழ் மாநாடு நடப்பதை நாளைய வரலாறு எண்ணி உட்பகையை நினைவு கூர்ந்து நகையாடுமல்லவா!

பொன்மனச் செம்மல்புரட்சித் தலைவர் அவர்களே! பெரியாரைத் துணைக்கோடாது அண்ணா அரசுக் கட்டில் ஏறியிருந்தால் என்ன பெருமை வந்திருக்கும். சிந்தியுங்கள். அதே நிலைமைதான் இன்றும்; அண்ணா அவர்கள் நிலையில் தான் இன்று நீங்களும். அண்ணாவைப் போல் குடிசெயல்வகை அறிந்து திராவிடக் குடியினப் பெருமையை - குடிமையைக் - காப்பீர்களா?

அண்ணா அவர்கள் திருச்சி சென்று குடிமை காத்தது போல் நீங்களும் கோபாலபுரம் செல்ல வேண்டும். அவரை அழைக்க வேண்டும். ஏன், மாநாட்டில் சிறப்பையும் வழங்கலாம். ஏற்பாரா கலைஞர் என அஞ்சாதீர்கள். முன்வரலற்றை உடனிருந்து கண்டவரல்லவா அவர்! பெரியார் அண்ணா ஊட்டிய தாய்ப் பாலில் வளர்ந்த நெஞ்சம் அது. தமிழ் என்றால் மறுக்வும் துணியுமோ? மறுத்தால் ... மறுத்தால்...

தமிழக முதல்வரே, திரும்பவும் ஒரு வரலாற்றைப் படையுங்கள்! குறள் படித்த நாங்கள் குடிமை காக்கத் தவறோம் என்பதை சாற்றுங்கள்!