உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம்? 19 நூற்றாண்டுகளாக அனைத்திலும் அடிமைப்பட்டும் அமுக்கப் பட்டும் அறிவிழந்தும் இருந்த நாம் அரை நூற்றாண்டில் பெற்ற கல்வியும் விழிப்பும் தானே இத்திருப்புமைக்குக் கரணியம்.

தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் திருக்குறளைக் கற்றுணர்ந்தவர்கள் அல்லரோ! குடி செயல்வகை அதி காரத்தைத் தான் மறப்பரோ? தன்மானம் கருதிக் கொண்டு தம் குடி உயரும் செயலை உரிய காலத்தில் செய்யாமல் இருப்பாரா அண்ணா அவர்கள். தம்மையும் தம் தம்பிகளையும் திட்டினாரே எனத் தம் மானம் கருதாது தமிழ்க்குடி திராவிட இனம் உயர்வதற்கான உரிய செயலை உரிய நேரத்தில் அன்றோ அண்ணா செய்தார்!

“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்" (1028)

-

சேரன் செங்குட்டுவனின் குடிகாத்த நிகழ்ச்சியினும் விஞ்சி நின்றன்றோ இந்நிகழ்ச்சி வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

தமிழவேள் கலைஞர் அவர்களே!

புரட்சித் தலைவர் அவர்களே!

நான் முந்தியா நீ முந்தியா என்று எண்ணாது. அன்புடைமையோடு

இனியவை கூறி

நடுவு நிலைமையோடு அடக்கமுடைமையோடு

பொறையுடைமையோடு

அழுக்காறு நீக்கி வெஃகாமை இன்றி

புறங் கூறாது

பயனில சொல்லாது

பெரியாரைத் துணைக்கொண்டு

சிற்றினம் சேராது

அவையஞ்சாது

நட்புப் பாராட்டி

பழமைபேணி

கூடாநட்பு நீக்கி பேதைமை அகற்றி இகல் அறுத்து