உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

117

கட்சிக்காக தந்தை பெரியாரும் தி.மு.க.விற்காக மூதறிஞர் இராசாசியும் வரிந்து கட்டிக் கொண்டு அத்தேர்தலில் பணி யாற்றினர். அது போழ்தும் சரி; அதற்கு முன்னரும் சரி; தி.மு.க. வையும் அதன் தலைவர்கள் முதல் உறுப்பினர்கள் யாவரையும் சேர்த்து தந்தை பெரியார் திட்டிய திட்டுகட்டும் ஏச்சும் பேச்சு களுக்கும் அளவே இல்லை. அமைதியாகவும், பொறுமையாகவும் அவற்றை இன்முகத்துடன் ஏற்றனர் அண்ணாவும் அவர்தம் தம்பிகளும்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. தி.மு.க. வென்றது; அண்ணா அவர்கள் அரசுப் பொறுப்பினை ஏற்றார். பெரியார் திருச்சிக்குத் தம் மாளிகைக்குச் சென்று விட்டார். சென்னையில்

ராசாசியோ சுறுசுறுப்புடன் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டார்; ஆட்சிக்கு வந்தோரை மந்திரங்கள் சொல்லி மயக்கி வாழ்த்திடக் காத்து நின்றார். அண்ணா வந்தாரா? தம்பிகள் வந்தனரா?

ஈரோட்டுப் பாதையில் உருண்டு புரண்டு வளர்ந்தவர்கள் அல்லரோ? ஆம்! தம் தலைவரை நோக்கி - திருச்சியை நோக்கி - ஒரு மனத்துடன் ஓடினர். அய்யாவைப் பார்த்து - எட்டி எட்டிப் பார்த்து மெய்ச் சிலிர்த்தனர். அண்ணா முன் நின்றார். "இந் தாருங்கள் அய்யா, இந்த வெற்றியே தி.மு.க. ஆட்சியே உங்கட்குப் பரிசு - படையல் என்று கைகட்டி என்ன சொல்வாரோ எனக் கலங்கி நின்றனர். தாய்ப்பாலுக்கு ஏங்கும் பச்சிளங் குழந்தை களாய் நின்றனர். அண்ணா பார்க்க தம்பிகள் பார்க்க ஏக்கமுடன் பார்க்க ... பெரியார் பார்க்க... எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்க்க...

கண்கள் குளங்களாயின; உடல்கள் இணைந்தன; உள்ளங்கள் ஒருப்பட்டன; அழுக்காறும் காழ்ப்புணர்வும் திக்குத்தெரியாமல் எங்கு இருந்தனவோ அங்கேயே ஓடிவிட்டன (அந்தக் காட்சியை இன்று நினைந்து எழுத, கண்களில் கண்ணீர் தேங்குகிறது).

அடுத்து வந்த கிழமையிலே இராசாசி அவர்கள் தம் சொந்த இதழ் எனச் சொல்லிக்கொண்ட இதழில் காழ்ப்பு மிக்கிட்டு, அழுக்காறு விஞ்சி, ஆற்ற இயலாதோர் நிலையில் பலரிடம் சொல்லிச் சொல்லிப் பின் எழுதவும் செய்கிறார். நான் ஏமாற்றப் பட்டேன்; இப்படியும் செய்வார் என்று கனவிலும் எதிர்பார்க்க வில்லை என்று.