உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பொருட்சீர்மை

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

முதல் மூன்று வேல்களும் திருக்குறள் பேரவை வரலாற்றை எவர் எக்காலத்தில் ஆய்வுப் பொருளாகக் கொள்வர் எனினும் அவ்வாய்வுக்கு மூலவைப்பகம் போல்வன.

நான்காம் வேல், ஐந்தாம் வெற்றி தொட்டுக் 'குறளாயம்' ஆய்ஞருக்கு மூல வைப்பகமாகவும், திருக்குறள் பேரவை ஆய்ஞருக்குத் துணை வைப்பகம் போலவும் அமைவன.

தமிழ் மொழியாக்கம், தமிழ்மொழி இயக்கம், திருக்குறள் ஆய்வு, தமிழினம், தமிழக அரசியல், தமிழ் வழிபாடு,தமிழீழம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், குமுகாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, குறளியப் பொருளியற் கொள்கை இன்னவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ ஆய்வார்க்கும் -நூல் செய்வார்க்கும் - அரும் பெரும் கருவூலமாகத் திகழ்வது குறளியம்.

ஒளிமணி

வேல் 1. வெற்றி 4 இலேயே ஆசிரிய உரை தீட்டுகின்றார் வேலா? தலைப்பு என்ன?

"இந்நாள் முதல்வர் செய்வாரா? முன்னாள் முதல்வர் ஏற்பாரா?" அரிய தலைப்பு! சங்கப் புலவர்கள் அனைவரும் சேர்ந்து நின்று ஒரு குடி காக்க உரைத்தது போன்ற ஒளிமணித் தலைப்பு!

இரு முதல்களும் இணையக் கூடியது அரசியல் களத்திலா? கட்சிக் களத்திலா? இல்லை! இல்லை! தாய்த் தமிழ்க்கு உலகப் பெருவிழா எடுக்கும் நன்மங்கலப் பொழுதிலே! அதனை ஏற்க இருவருள் எவர் முந்து நின்றனர்? முந்து நின்றால் முழுப்புகழ் அவர்க்கன்றோ! தனித்தனி கருத்துக்களுக்குத் தலையாட்டம் தந்து விடாமல் தாய்த் தமிழ் விழாவிலே உலகே தலையாட்டம் இருவரும் ஒருவராம் உயர்நிலை எய்தக் கூடாதா என உருகி உருகி -எழுதிய எழுத்து வேலா எழுத்து.

உருக்கம்

1967 ஆம் ஆண்டு இந்தியப் பேராயக் கட்சி தேர்தலில் தோல்வியுற்றது. தி.மு. கழகத்தினர் தமிழ்நாட்டில் இல்லை இல்லை - பெயர் மாற்றமும் பெற இயலா அவல நிலையில் இருந்த சென்னை மாநிலத்தில் அரசுக் கட்டில் ஏறியது பேராயக்

-