உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

121

அவருடைய வரலாறு படைக்கும் மடல்கள் வாயிலாக நம்மைச் சிந்திக்க வேண்டும். பாராட்டுதலுக்குரிய தமிழக முதல்வர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்திரா அம்மையாரிடம் கூட நட்புப் பாராட்டிக் கொண்ட கலைஞர், தமது கெழுதகைமை மிக்க உறவினராக விளங்கிய ம.கோ.இரா. அவர்களுடன் நட்புக்காட்ட உறவுக் கரங்களைத் தரத் தயங்குவது ஏன்? அவர் நெஞ்சத்தில் நெருடிக் கொண்டிருப்பது எது? என்று ம.கோ. என்று ம.கோ. இராமச்சந்திரன் ஆராய்ந்தறிய முன்வர வேண்டும்" என்று அடிகளார் ஆய்ந்துரைத்தார்.

ஆராய வேண்டியவர்கள் ஆராய்ந்தார்களா? அதுதான் தமிழகம் காணாத தொடர் வரலாறு ஆயிற்றே! ஆய்ந்திருந்தால், தமிழினத்திற்கு ஓர் அரிய விடிகாலம் ஆகியிருக்குமே! தமிழினத் திற்குள் மண்டிக் கிடக்கும் இனநலம் கருதாச் செயல்கள் தாமே, அண்டை அயலும் தமிழினம் மண்டியிடக் கண்டு வெறிக் கூத்தாட வைக்கின்றன! பாவேந்தர் சொன்னாரே! போர்க்களம் போதல் வேண்டா; பொன் பொருள் இழக்க வேண்டா; ஒன்றே ஒன்று போதும்; பகையில்லை; பாழில்லை! எது அந்த ஒன்று! தமிழர் ஒன்றுபட்டு விட்டார் என்ற ஒன்றே ஒன்று.

66

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"

என்பது தானே அது. இந்நிலை என்றுதான் ஏற்படுமோ? இந்நிலை ஏற்பட வேண்டும் என்பதற்கென்றே, ஏற்பட்ட,ஈழப்பாடே இப்பாடு அப்பாடு என்னாமல் எப்பாடு ஆகிவிட்டது!

வெப்பம்

"உய்விக்கும் தலைவன் உருவாவ தெக்காலம்" அவன் வழி உருவாவ தெக்காலம்? என்றும் ஆசிரிய உரை வரைந்தார் வேலா (2:3). "இன்று வேண்டியது ஒன்றே ஒன்று; அது நல்ல தலைமை. ஊழி பெயரினும் தாம் பெயராகக் குறளியச் சான்றாளன் என்கிறது மற்றோர் இதழின் ஆசிரிய உரை (2;5).

"திராவிட இயக்கத்தீரே! திரும்பிப் பாருங்கள் யார் உங்களை மன்னிப்பது?” என விளித்து வினா எழுப்புகிறது ஆசிரிய உரை ஒன்று (6:3).

"மதுவிலக்கைக் கைவிடுவதினும் நான் ஆட்சியைக் கைவிடுவேன் என்று சூளுரைத்து பேரறிஞர் அண்ணா வழிவந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் எத்தனையோ