உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

அறிவுடைய அறப்பணிகள் நம் கண் முன்னர் இருந்தும் மது விலக்கை ஒழித்துப் பின் ஏற்ற பாங்கினால் மாறிய நம் மனக் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.

இன்றோ அன்னையின் மீதிட்ட ஆணையையும் மறந்து, தலைவன் வகுத்த கொள்கைகளை யெல்லாம் இழந்து மது விலக்கைக் கைவிட்டு ஆட்சி நடத்தும் இழிபாங்கை இந்நாள் முதல்வர் புரட்சித் தலைவர் ஏற்றுள்ளமையோ நஞ்சு தோய்ந்த வாள்முனை நெஞ்சாங் குலைகளை வருடினாற்போல் வருத்திக் கொண்டுள்ளது.

இந்த அழிவுப் பணிகளில் திராவிட இயக்கங்களும் ஈடுபடலாமா? இதுவே நம் குமுறல் வினா" என வெதும்பி எழுதியதன் ஒரு பகுதி இது. அண்ணா ஆட்சி தவிர்த்த கடந்த பதினெட்டு ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றினைச் சிந்திக் கிறோம். அன்று, இன்று எனப் பதின்மூன்று முறை தலைப்பிட்டுக் கருத்துரைக்கும் ஆசிரியவுரைத் தலைப்பு "இரட்டைக் குழல் துமுக்கியா? ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளா?" என்பது.

"தி.க. தோழர்கள் பெரியாரின் அருமைத் தலைமைத் தொண்டரை இழக்கக் கூடாது?; பெரியாரின் தொண்டர்கள் பெரியாரின் வழியில் இருந்து மாறக் கூடாது. யார் எங்கிருந் தாலும் இனநலம் காக்க ஓரணியில் திரளும் மனப் பான்மையை நாம் இழந்து விடக் கூடாது." அதே போல் கொள்கையாளர் களை இழக்கும் நிலை தி.க.விற்கு வரக் கூடாது. எதையும் (பொருள், சொத்து, தன்முனைப்பு) விட்டுக் கொடுக்கலாம். ஆனால் கொள்கையாளர்களை விடக்கூடாது. ஏனெனில் கொள்கையாளர்களால் தாம் பெரியாருக்கு இவையெல்லாம் உருவாயின என்பதை மறந்து விடக்கூடாது. இந்த நாட்டின் கொள்கைகட்குத் தொண்டர்கள் அமையார் என்னும் இழி சொல்லை நீக்குங்கள். திரு.கி.வீரமணி தம் தோழர்களை இழப்பதும், தோழர்கள் திரு.கி. வீரமணியை இழப்பதும் வரலாற்றில் பெரியாருக்கும் பெரியாரியத்திற்கும் முதுகில் விழும் கத்திக்குத்து. மற்றவர் நகையாட வாழ்ந்து வீழ்தல்கூடாது! கூடாது! இனநலம் எல்லாம் புகழும் தரும் (8:1). இவ்வாசிரிய உரைக்குத் தலைப்பு பெரியார் முதுகில் கத்திக்குத்து என்பது. ஆட்சிக் குரியவர்கள் சிலராக நாற்காலி வெறியர் கள் பலராயினரே என்றும் ஆசிரியவுரை எழுந்தது (87) "தேர்தல் வருகிறது தெரிவது என்ன" (5:4) யாருக்கு நம் ஒப்போலை? (5:5)